கிட்டத்தட்ட
நம் அனைவரின் வீட்டிலும் இருக்கும்
ஒரு பழக்கம் சமைக்க உபயோகித்த எண்ணெயை
மீண்டும் உபயோகிப்பது. இது நல்லதா அல்லது கெட்டதா என்பது தெரியாமலே
பலகாலமாக நாம் இதனை வழக்கமாக கொண்டிருக்கிறோம்.
இன்றும் நம்மில் இருக்கும் ஒரு கேள்வி ஒருமுறை உபயோகித்த எண்ணெயை மீண்டும் உபயோகிக்கலாமா என்பதுதான்?
இதற்கான விடை என்னவெனில் உபயோகிக்க கூடாது என்பதுதான்.
இதற்கான விடை என்னவெனில் உபயோகிக்க கூடாது என்பதுதான். ஏனெனில் இதனால் பல
பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்
ஊட்டசத்து நிபுணர்களின் கருத்துப்படி சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை அதிக
வெப்பநிலையில் சூடுபடுத்தலாம், ஆனால் ஆலிவ் எண்ணெய் , எள் எண்ணெய்
போன்றவற்றை அதிக வெப்பநிலைக்கு சூடுபடுத்துவதை தவிர்க்கவும்.இப்படி அதே எண்ணெயை மீண்டும் உபயோகிப்பது ஆர்தோகுளோரோசிஸ் என்னும் நோயை
உண்டாக்குகிறது. இதனால் உடலில் கெட்ட கொழுப்புகளின் அளவு அதிகரிக்கிறது.
எண்ணெயின் ஆயுளை அதிகரிக்க எளிய வழி ஒரு தெர்மோமீட்டரை உபயோகிப்பதுதான்.
இது உங்களுக்கு எண்ணெயை எந்த வெப்பநிலையில் பயன்படுத்த வேண்டும், எப்பொழுது
நெருப்பை குறைக்க வேண்டும் என்று அறிய உதவும். அதிக வெப்பநிலையில்
உபயோகப்படுத்திய எண்ணெயை மீண்டும் உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது. ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரையின்படி உணவுத்துகள்களை வடிகட்டி கொண்டு
நன்கு வடிகட்டிய பின்தான் அதனை உபயோகிக்க வேண்டும். அதேசமயம் அதனை அதிக
வெப்பநிலையில் உபயோகித்திருக்க கூடாது என்பதையும் உறுதிசெய்துகொள்ளவும்.
உபயோகித்த எண்ணெயை நன்கு மூடிய பாத்திரத்தில் சேமிக்கவும். ஒருவேளை
சேமிக்கப்பட்ட எண்ணெய் அடர் நிறத்திற்கோ, தடிமனாகவோ அல்லது வழவழப்பாகவோ
மாறினால் அந்த எண்ணெயை மீண்டும் உபயோகப்படுத்தாதீர்கள். உணவு துகள்களுடன்
திறந்து வைக்கப்பட்டிருந்த எண்ணெயை எக்காரணத்தை கொண்டும் மீண்டும்
உபயோகிக்காதீர்கள்.
இந்த வழிமுறிகளை பின்பற்றாமல் உபயோகித்த எண்ணெயை மீண்டும் மீண்டும்
உபயோகிப்பது பல ஆரோக்கிய கோளாறுகளை உண்டாக்கும். இந்த எண்ணெய்களில்
வழக்கமான எண்ணெயை விட அதிகளவு கொழுப்பு இருக்கும். மேலும் இதில் உள்ள
உணவுத்துகள்கள் எண்ணையை நச்சுத்தன்மை உள்ளதாக மாற்றிவிடும். இந்த எண்ணெயை
உபயோகிக்கும்போது அது குடல் புற்றுநோய், உயர் கொழுப்பு அளவுகள் மற்றும் இதய
கோளாறுகள் போன்ற நோய்களை ஏற்படுத்தும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...