இது பார்க்க முழுக்க முழுக்க கூகுள் நிறுவனமே வெளியிட்டது போன்ற தோற்றத்தில் இருக்கும்.
ஆனால் உங்கள் மொபைலில் உள்ள தகவல்களை திருடுவதற்கு என்றே தனிப்பட்ட முறையில் தயாரிக்கப்பட்ட வைரஸ் இதுவாகும்.
ப்ளே ஸ்டோர் தானே என்று நினைத்து நீங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்தால், பின்னணியில் இயங்க தொடங்கும்.
அப்போது உங்கள் மொபைலில் சேமித்து வைத்திருக்கும் மொபைல் நம்பர், பாஸ்வோர்ட் விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் என்று அனைத்தும் வைரஸ் உருவாக்கிய நிறுவன சர்வருக்கு சென்று விடும்.
உங்கள் மொபைலின் கட்டுபாட்டை அவர்கள் வசம் கொண்டு வர, டாட் நெட் பைல்களையும் உங்களுக்கு தெரியாமலேயே மொபைலில் பதிவிறக்கம் செய்து சோதித்து பார்ப்பார்கள்.
இது உலகுக்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கப்போகிறது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சோதனை நிலையில் இருக்கும் போதே பல்வேறு பாதிப்புகளை ஏற்ப்படுத்த கூடிய இந்த மொபைல் அப்ளிகேசன் வெளியாகும் பட்சத்தில் இன்னும் தீவிர விளைவை ஏற்ப்படுத்தும்.
இது, ரஷ்ய ஹேக்கர்களின் கைவரிசையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இனி மேல் தேவையில்லாத அப்ளிகேசன்களை ப்ளே ஸ்டோரில் டவுன்லோட் செய்வதை தவிர்க்குமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...