கொய்யாப் பழத்தில் மிக அதிமான மருத்துவப் பயன்கள் உள்ளன. மேலும் இவை மிகவும் எளிதில் கிடைக்கக் கூடிய ஒரு பொருள் ஆகும்.
கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
ஊட்டசத்துக்கள் அதிகம் நிறைந்த கொய்யாப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் பல்வேறு நன்மைகளைப் பெறலாம்.
கொய்யப்பழம் எப்படி தைராய்டு பிரச்சனையை சரி செய்யும்?
கொய்யா பழத்தில் அதிக அளவு காப்பர் ஹார்மோன் உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதைக் கட்டுப்படுத்தி வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது.
மேலும் கொய்யா பழம் உடலில் உள்ள ஆற்றல் கட்டுப்பாடு மற்றும் வளர்சிதை மாற்றத்தில் தைராய்டு ஹார்மோன்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
தினமும் 1-2 கொய்யப்பழத்தை உண்டு வந்தால் அதில் உள்ள ஊட்டசத்துக்கள் தைராய்டு ஹார்மோன்கள் ஒழுங்காக சீரமைத்து தைராய்டை குணப்படுத்த உதவுகின்றது.
கொய்யப்பழத்தின் நன்மைகள்
கொய்யப்பழத்தில் உள்ள கேலிக் அமிலம், கேதெச்சின், எபிகேதெச்சின் ஆகியவை உடலில் சேரும் அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்க பெரிதும் உதவுகின்றன.
கொய்யப்பழத்தில் உள்ள .குறைந்த கிளைச்மிக் குறியீட்டின் காரணமாகச் சர்க்கரையின் அளவு திடீரென உயர்வது தடுக்கப்பட்டு சர்க்கரை நோய் வரமால் தடுக்கின்றது.
கொய்யா இலைகளில் உள்ல க்யுர்செட்டின்,லைகோபென் மற்றும் விட்டமின் சி ஆகியவை புற்றுநோய் செல்கள் வளராமல் தடுத்து நம் செல்களுக்கு பாதுகாப்பு அளித்திடும்.
கொய்யாப் பழம் வைட்டமின் சி க்கு மிகப்பெரிய மூல ஆதாரமாக் விளங்குகின்றது மேலும் நம் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்த கொய்யாப் பழம் அடிக்கடி சாப்பிட வேண்டும்.
கொய்யாப் பழம் சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் அளவினைமேம்படுத்தி உயர் இரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளுக்கு இரத்த அழுத்தம் கட்டுப்படுத்துகிறது.
முகத்திற்கு பொலிவை தருவதுடன் தோல் வறட்சியையும் நீக்கி பளபளப்புடன் கூடிய இளமைத் தோற்றத்தைத் தருகிறது.
நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு கொய்யாப் பழம் மிகவும் உகந்தது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் கொய்யாப் பழம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...