2019 ம் ஆண்டு முதல் ஓட்டுநர் உரிமம் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 2019 முதல் ஸ்மார்ட் ஓட்டுநர் உரிமம், ஸ்மார்ட் வாகனப் பதிவுச் சான்று ஆகியவை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே மாதிரி இருக்கும்.
இவற்றில் QR கோட் உடனான மைக்ரோ சிப் இடம்பெற்றிருக்கும என்பது குறிப்பிடதக்கது. மேலும் NFC வசதியும் சேர்க்கப்பட உள்ளது. இது மெட்ரோ மற்றும் ஏடிஎம் கார்டுகள் போன்று, பதிவான தகவல்களை கையடக்கக் கருவி மூலம் அறியும் வகையில் இருக்கும். புதிய ஓட்டுநர் உரிமத்தில் உடல் உறுப்பு தானம் செய்யத் தயாரா என்ற விவரமும் சேர்க்கப்படுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் சிறப்பு வாகனங்கள் குறித்த தகவலும் வாகனப் பதிவு சான்றிதழும் இடம்பெறும். இதுதொடர்பாக பேசிய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சக அதிகாரி, வாகனப் பதிவு சான்றிதழில் உமிழ்வு விதிகள் இருக்கும். அதன்மூலம் மாசுக் கட்டுப்பாட்டு சோதனைக்காக தேவையை அறிந்து கொள்ளலாம் என்றார்.
நாடு முழுவதும் தினசரி 32,000 ஓட்டுநர் உரிமங்கள் வழங்கவோ அல்லது புதுப்பிக்கவோ செய்யப்படுகி்றது. அதேபோல் தினசரி 43,000 வாகனங்கள் பதிவிற்கோ அல்லது மறுபதிவோ செய்யப்படுகி்றது. எனவே யாராவது புதுப்பித்தல் அல்லது மறுபதிவிற்கு மண்டல போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு சான்றுகளை வழங்குவார் என்று கூறினார்.
புதிய உரிமம் வழங்கப்படும் என்று சொல்லுங்கள் குண்டைப் போடாதீங்க
ReplyDelete