'அரபிக் கடலில் உருவாகும் புயல் சின்னம் காரணமாக, தமிழகத்தில், வரும், 7ம்
தேதி, 20.5 செ.மீ., அளவுக்கு, பேய் மழை பெய்யும்' என, இந்திய வானிலை
மையம், 'ரெட் அலர்ட்' அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அரபிக் கடலில், தென் மேற்கு பகுதியில் இருந்து வீசும், ஈரப்பதம் மிக்க காற்று, அதிக வலுவடைந்துள்ளது. அதனால், கடலில் இன்று இரவு, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில், மிக கன மழை பெய்ய, அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில், ஐந்து நாட்களாக கன மழை கொட்டி வரும் நிலையில், இன்னும் கன மழை தொடரும் என அறிவித்துள்ளதால், அங்கு, மேலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
எவ்வளவு மழை பெய்யும்?
* இன்றும், நாளையும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில் கன மழை பெய்யும். சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில், இன்று மட்டும், அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளது. கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவை ஒட்டிய, தமிழக பகுதிகளில், பெரும்பாலும் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
அதிக மழை பொழிவுக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்: திருநெல்வேலி, விருதுநகர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள்
* வரும், 7ம் தேதி, தமிழகம் மற்றும் கேரளாவில், மிக கன மழை முதல், மிக அதிக கன மழை பெய்யும். தமிழக கடலோர பகுதிகள்,
கர்நாடகாவை ஒட்டிய தமிழக பகுதிகள் மற்றும் அந்தமான் தீவுகள் பகுதிகளில், கன மழை பெய்யும்.
அதிக வாய்ப்புள்ள மாவட்டங்கள்: துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், நீலகிரி, கோவை, தேனி மற்றும் திருநெல்வேலி
* வரும், 8ம் தேதி, தமிழகம் மற்றும் புதுச்சேரியை ஒட்டிய கடலோர பகுதிகள், கடலோரத்தை ஒட்டிய உள்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை பகுதி என, அனைத்து மாவட்டங்களிலும், சில இடங்களில், மிக கன மழை பெய்யும்.
அதிக வாய்ப்புள்ள மாவட்டங்கள்: ராமநாதபுரம், நாகை, கடலுார், விழுப்புரம், சென்னை
மற்றும் புதுச்சேரி
* வரும், 9ம் தேதி, தமிழக உள் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள் மற்றும் கிழக்கு கடலோர மத்திய மாவட்டங்களில், கன மழைக்கு வாய்ப்புள்ளது.
அதிக வாய்ப்புள்ள மாவட்டங்கள்: மதுரை, திருச்சி, விருதுநகர், ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை.
இதில் குறிப்பிடப்படாத பகுதிகளில், லேசானது முதல் மிதமானது வரை, திடீர் மழை பெய்யலாம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...