நாட்டின் துணைப் பாதுகாப்பு படைகளில் 61,000 காலி இடங்கள் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்புத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் இன்று(அக்-21) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாட்டிலுள்ள துணைப் பாதுகாப்பு படைகளிலுள்ள வீரா்கள் எண்ணிக்கை மொத்தம் 10 லட்சம் பேராகும். இப்படைகளில் பதவி ஓய்வு, பதவி விலகல், மரணம் உள்ளிட்ட பல காரணங்களால் காலி இடங்கள் உருவாகியுள்ளன. சிஆர்பிஎஃப் படையில் 18,460 பதவிகளுக்கான .இடங்களும்,எல்லைப் பாதுகாப்பு படையில்10,738 பதவிகளுக்கான இடங்களும்,காலியாக உள்ளன.
திபெத்தியன் எல்லைப் பாதுகாப்பு படையில் 5,786 பதவிகளுக்கான இடங்களும், எஸ்எஸ்பி எனப்படும் சாஸ்ஹஸ்திரா சீமா பாய் படையில் 18,942 பதவிகளுக்கான இடங்களும் காலியாக உள்ளன. அசாம் ரைஃபில்ஸ் படையில் 3,840 பதவிகளுக்கான இடங்களும்,சிஐஎஸ்எப் படையில் 3812 பதவிகளுக்கான இடங்களும் காலியாக உள்ளன.
இவற்றில் சிஆர்பிஎப் எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையானது உள்நாட்டிலுள்ள சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை சமாளிக்க மாநில போலீசாருக்கு உதவிடும் பணிகளிலும், மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறது. எல்லைப்பாதுகாப்புப் படையானது இந்திய பாகிஸ்தான் எல்லைகளிலும், இந்திய திபெத் எல்லைகளிலும் எஸ்எஸ்பியானது, இந்திய நேபாள எல்லைகளிலும்,இந்திய பூட்டான் எல்லைப் பாதுகாப்புப் பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றன. சிஐஎஸ்எஃப், விமான நிலையங்கள், அணுசக்தி உலைகள் நீதிமன்றங்கள் உள்ளிட்ட முக்கிய அரசு கட்டடங்களில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படுகின்றது, அசாம் ரைஃபில்ஸ் படையானது இந்திய மியான்மர் எல்லையிலும் வடகிழக்கு மாநிலங்களி்ல் நடந்து வரும் கிளர்ச்சிகளை அடக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...