அலைக்கற்றை ஒதுக்கீடு செய்து ஆறு மாதத்திற்குள் ஐந்தாம் தலைமுறை 5ஜி தொலைதொடர்பு சேவைகளை அறிமுகப்படுத்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தயாராகிவருகிறது. அதாவது 2020 மத்தியில் இந்தியாவில் 5ஜி சேவைகளை வழங்கி அதிரடி காட்டப்போகிறது முகேஸ் அம்பானியின் ஜியோ.
2019 இறுதிக்குள் 4ஜியை விட 50முதல் 60மடங்கு வேகமான பதிவிறக்க வசதியை கொடுக்கவல்ல 5ஜி சேவைகளை வழங்கும்பொருட்டு, அலைவரிசைகளை ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இது தொடர்பாக ஜியோ நிறுவனத்தின் பெயர் குறிப்பிடாத நிர்வாகி கூறுகையில்" ஜியோ நிறுவனம் 5ஜி சேவைக்கு தயாராக எல்.டி.ஈ நெர்வொர்க்-ஐ கொண்டுள்ளது மற்றும் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்த 5 அல்லது 6 மாதத்திற்குள் புதிய தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை வழங்கும் திறனும் எங்களிடம் உள்ளது" என தெரிவித்தார்.
புயல் வேகத்தில்
மேலும் 5ஜி நெட்வொர்கிற்கு முதுகெலும்பாக விளக்கக்கூடிய ஆப்டிகல் பைபர் கேபிள்களை இந்த தொலைதொடர்பு நிறுவனம் புயல் வேகத்தில் பதித்து வருவதாகவும் அவர் கூறினார்.
வருங்காலத்தில் தொலைதொடர்பு துறைக்கு பைபர் ஆப்டிக் கேபிள் பதிப்பது என்பது முக்கிய நோக்கமாக இருக்கும் நிலையில், அதிலும் குறிப்பாக நாட்டின் 5ஜி சேவை மேம்பாட்டிற்கு அவசியம் என்பதால், ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவை வழங்க தயாராகும் வகையில், தேவையான அளவு எம்.ஐ.எம்.ஓ(MIMO -Multiple-Input Multiple-Output) , நெட்வொர்க் பங்க்சன் வெர்சுவலைசேசன்( Network Functions Virtualization -NFV) மற்றும் மென்பொருளாளான வலையமைப்பு( Softwaredefined Networking ) போன்றவற்றை கட்டமைத்து வருகின்றன.
சிப்செட்
இந்த அலைவரிசைக்கு ஏற்றவாறு கருவிகள் கிடைப்பது உள்ளிட்ட சூழல்களுக்கு தயாராக இருப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்ற கூறிய ஜியோ நிர்வாகி, 5ஜி தொழில்நுட்பத்தை வழங்க கருவிகள் மற்றும் ரவுட்டர்கள் இல்லையெனில், அதுவும் சவாலானதாக மாறிவிடும் என்கிறார்.
சிப்செட் தயாரிப்பில் ஆதிக்கம் செலுத்தும் இரு அமெரிக்க நிறுவனங்களான க்வால்காம் மற்றும் தைவான்சே மீடியாடெக், 5ஜி அடிப்படையிலான மோடம்களை உருவாக்குகின்றன.
ரிலையன்ஸ்
ரிலையன்ஸ் குழுமத்தின் தொலைதொடர்பு பிரிவான ஜியோ, வர்த்தக ரீதியாக 5ஜியை அறிமுகப்படுத்தும் முன்பு அனைத்தும் கருவிகளும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. சர்வதேச அளவில், 5ஜி தொழில்நுட்பத்தில் செயல்படும் அதிகவிலை கருவிகள் 2019 முதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபி அடிப்படையிலான வலையமைப்பை கொண்ட ஜியோ நிறுவனம் உள்ளதால், முந்தைய புதிய தலைமுறை தொழில்நுட்பங்கறை போலில்லாமல், 5ஜி சேவை விரைவாக சந்தையை அடையும் வாய்ப்புள்ளதாக, வல்லநர்களை தெரிவிக்கின்றனர்.
5ஜி மாற்றம் விரைவாக நடைபெறும்
தொலைதொடர்புத்துறை செயலாளர் அருணா சுந்தர்ராஜன் சமீபத்தில் கூறுகையில், 3ஜி சேவையில் இருந்து 4ஜி சேவைக்கு மாறியதை ஒப்பிடும் போது, 4ஜி யிலிருந்து 5ஜி மாற்றம் விரைவாக நடைபெறும் என தெரவித்தார். மேலும் 5ஜி சேவைகளை சோதனை செய்ய ஜியோ , பார்தி ஏர்டெல், வோடாபோன் ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல் நிறுவனங்களுக்கு மத்திய தொலைதொடர்புத்துறை ஏற்கனவே அழைப்புவிடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Please unga 4G network ah first nalla kudunga da idiots,......
ReplyDelete