திருக்குறள்
அதிகாரம்:விருந்தோம்பல்
திருக்குறள்:85
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
விளக்கம்:
விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?
பழமொழி
A good reputation is a fair estate
நற்குணமே சிறந்த சொத்து
இரண்டொழுக்க பண்பாடு
1. பெரியோர் , பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.
2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.
பொன்மொழி
இயற்கைக்கு மாறுபட்ட செயல்களை என்றும் செய்ய முனையக்கூடாது. உலக நடைமுறைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்வதில்லை என்று உறுதி எடுங்கள்.
- ஔவையார்
பொது அறிவு
1.பட்டு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
சீனா
2. இந்தியாவின் தற்போதைய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் யார்?
ஜெகத் பிரகாஷ் நட்டா
தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்
கேழ்வரகு அல்லது ராகி
1. இதில் கால்சியம் அதிகமுள்ளது.
2. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் இரத்த சோகை தடுக்கவல்லது.
3. இதனைக் கூழாக குடிக்கும் போது உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
English words and meaning
Quarry. கல் சுரங்கம்
Quash. தகர்த்தல்
Quad. முற்றம்
Qualm. மனசாட்சி
Quack. உளறுதல்
அறிவியல் விந்தைகள்
தாமரை
நான் தண்ணீருக்குள்ளேயேயிருப்பதால் அழுகி மாய்ந்து விடுவேனோ என முதலில் பயந்தேன். பிறகுதான் எனக்குத் தெரிந்தது என் வெளிப்பரப்பு மெழுகு போன்ற பொருளினால் மூடப்பட்டுள்ளது என்று! தண்ணீருக்குள் இருப்பதால் தண்டு காற்றை பெற முடியாது என எண்ணவேண்டியதுமில்லை. இலை சுவாசித்து அனுப்பும் காற்றை சேமித்து வைக்க தண்டின் உட்புறம் காற்று இடைவெளிகளை இயற்கை கொடுத்துள்ளது. முதலில் நான், வாழ்நாள் முழுவதும் தண்ணீருக்குள்ளா இருக்க வேண்டுமென கவலைப்பட்டேன். இப்பொழுது கடவுள் என்னை சரியான இடத்தில் தக்க பாதுகாப்போடுதான் வைத்திருக்கிறார் என உணர்ந்து இந்த இடத்தில் நான் மகிழ்ச்சியோடு இருக்கிறேன்.
நீதிக்கதை
ஓர் அழகான கதை.
உழைப்பின் உன்னதத்தை உணர்த்துகின்ற கதை.
கடற்கரை ஓரமாக பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது. அதன் கிளை ஒன்று மிக நீண்டு கடல் நீருக்கு மேலாக நீட்டிக் கொண்டிருந்தது. அதன் உச்சியில் கடற்குருவி ஒன்று கூடு கட்டியது. அதனுள் நாலைந்து முட்டைகளை இட்டு அடைகாத்து வந்தது. ஆண் குருவியும் பெண் குருவியும் அதே கூட்டில் வசித்தபடி தங்கள் குஞ்சுகள் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.
ஒரு நாள் பெரும் காற்று வீசியது. பெரிய அலைகள் பொங்கி எழுந்தன. கிளையில் இருந்த கூடு நழுவி காற்றின் வேகத்தில் கடலில் விழுந்து மூழ்கியது. குருவிகள் மனம் பதறிக் கதறின. கடல் நீரில் விழுந்து கூடு மூழ்கிய இடத்திற்கு மேலாக கீச், கீச் என்று கத்தியபடியே சுற்றிச் சுற்றி வந்தன.
பெண் குருவி மனம் உடைந்து சொல்லியது. எப்படியாவது முட்டைகளை மீண்டும் நான் காண வேண்டும். இல்லையேல் நான் உயிர் வாழ மாட்டேன் என்றது .
ஆண் குருவி சொன்னது. அவசரப்படாதே ஒரு வழி இருக்கிறது. நமது கூடு கரையின் ஓரமாகத் தான் விழுந்துள்ளது. கூட்டுடன் சேர்ந்து முட்டைகள் விழுந்ததால் நிச்சயம் உடைந்திருக்காது. அதனால் இந்த கடலிலுள்ள தண்ணீரை வற்றவைத்து விட்டால் போதும். முட்டைகளை நாம் மீட்டுவிடலாம்.என்று பெண் குருவிக்கு தன்னம்பிக்கை ஊட்டியது .
கடலை எப்படி வற்றவைப்பது?
முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவர இன்னும் பல நாட்கள் ஆகலாம். எனவே நாம் இடைவிடாமல் சில நாட்கள் முயல வேண்டும். நம் வாயில் கொள்ளும் மட்டும் தண்ணீரை எடுத்துக் கொண்டு பறந்து சென்று தொலைவில் கொட்டுவோம். மறுபடியும் திரும்பி வந்து மீண்டும் நீரை நிரப்பிக் கொண்டு போய் தொலைவில் உமிழ்வோம். இப்படியே இடைவிடாமல் செய்து கடல் நீரை வேறு இடத்தில் ஊற்றினால் கடல் நீர் மட்டம் குறைந்து தரை தெரியும். நமது முட்டைகள் வெளிப்படும்.
இதையடுத்து இரண்டு குருவிகளும் தன்னம்பிக்கையுடன் ஊக்கத்துடன் செயலில் இறங்கின. விர்ரென்று பறந்து போய் தங்களது சிறிய அலகில் இரண்டு விழுங்கு நீரை நிரப்பிக் கொண்டன. பறந்து சென்று தொலைவில் போய் உமிழ்ந்தன. மீண்டும் பறந்து வந்து இரண்டு வாய் தண்ணீரை அள்ளின. கொண்டுபோய் தொலைவில் கக்கின.
இப்படியே இரவு பகல் நாள் முழுவதும் இடைவிடாமல் நடந்து கொண்டிருந்தது, இவற்றின் நீர் அகற்றும் படலம்.
அப்போது அந்தக் கடற்கரை ஓரமாக முனிவர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். மகா சக்திகள் நிறைந்த மகான் அவர். ஆளில்லாத அந்தப் பகுதியில் கீச் கீச் என்ற சப்தம் கேட்கவும் அவர் திரும்பிப் பார்த்தார். இரண்டு குருவிகள் பறந்து போவது கண்டு சிரித்தபடி மேலே நடந்தார்.
மீண்டும் கீச் கீச் என்ற சப்தம். குருவிகள் கடலுக்கு மேல் பறந்தன. எதையோ அள்ளின. மீண்டும் பறந்தன. இப்படி பலமுறை நடைபெறவும், முனிவருக்கு வியப்பு. கடலில் இருக்கும் எதைக் கொத்துகின்றன இவை? அங்கு இரை ஏதும் இல்லையே என்று நினைத்தார் அவர்.
உடனே அந்த மகான் கண்களை மூடினார். உள்ளுக்குள் அமிழ்ந்தார். மறுகணம் அவர் மனதில் எல்லா நிகழ்ச்சிகளும் படம்போல் ஓடின. அவர் மனம் உருகியது. முட்டைகளை இழந்த தாயின் தவிப்பும் கடலையே வற்ற வைத்தாவது முட்டைகளை மீட்க வேண்டும் என்ற அதன் துடிப்பும் அவரது உள்ளத்தை நெகிழச் செய்தன.
உடனே தனது தவ பலத்தை ஒன்று திரட்டிய முனிவர் கையை உயர்த்தினார். மறுகணம் கடல் சில அடிகள் பின் வாங்கியது. அங்கே கூட்டுடன் இருந்த முட்டைகள் தென்பட்டன. குருவிகள் அதைப் பார்த்து குதூகலத்துடன் கீச்சிட்டன. ஆளுக்கொன்றாக முட்டைகளை பற்றிக் கொண்டு போய் வேறிடத்தில் சேர்த்தன.
நான் அப்போதே சொன்னேன் பார்த்தாயா? நமது ஒரு நாள் உழைப்பில் கடல் நீரை குறைத்து முட்டைகளை மீட்டு விட்டோம் பார்த்தாயா? என்றது ஆண் குருவி பெருமிதமாக.
முனிவர் சிரித்தபடி தொடர்ந்து நடந்தார். இங்கே குருவிகள் முட்டைகளை மீட்டது அவற்றின் உழைப்பாலா? இல்லை. முனிவரின் அருளால். ஆனால் அந்தக் குருவிகளுக்கு முனிவர் என்ற ஒருவரைப் பற்றியோ தவ வலிமை என்றால் என்ன என்பது பற்றியோ, எதுவுமே தெரியாது.ஆனால் தன்னம்பிக்கையுடன் கடல் நீரை அள்ளின .
அதே சமயம் குருவிகள் மட்டுமே கடல் நீரை மொண்டு சென்று ஊற்றிக் கொண்டிருக்காவிட்டால் முனிவர் தம் வழியே போயிருப்பார்.
அவரை மனம் நெகிழ வைத்தது எது? அவற்றின் உழைப்பும் முயற்சியும்தான். ஆக இங்கே முட்டைகள் மீட்கப்பட்டது, குருவிகளாலும் தான். முனிவராலும் தான். முனிவரின் ஆற்றல் அவற்றுக்குப் பக்க பலமாக வந்து சேர்ந்தது. குருவிகளின் உழைப்புத்தான் அதற்கு அடிப்படையாக அமைந்தது.
அன்பு நண்பர்களே .
எல்லையில்லா ஆற்றல் பெற்றவர்களே
விழித்திருக்கும் நேரமெல்லாம் உழைத்துக் கொண்டிருங்கள். வாழ்வில் எல்லா நேரமும் நல்ல நேரம்தான். உழைக்காத நேரம்தான் ராகு காலம்.எம கண்டம், திட்டமிடுங்கள். ஒவ்வொன்றையும் திட்டமிடுங்கள். வாழ்க நலமுடன்❗✨✨✨✨✨✨🙏
இன்றைய செய்திகள்
27.10.18
* பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
* தீபாவளி நெரிசலை தவிர்க்கும விதமாக சென்னையில் இருந்து ஆறு இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
* சீனாவின் உதவியுடன், 2022ல், முதல்முறையாக, தங்கள் நாட்டு வீரரை, விண்வெளிக்கு அனுப்ப, பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக, அந்நாட்டு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பவாத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
* உலக பாட்மின்டன் தரவரிசையில் இந்திய வீராங்கனை சிந்து 2-ஆம் இடமும், சாய்னா நேவால் 9-வது இடமும் பெற்றுள்ளனர்.
*மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ (35) சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக வியாழக்கிழமை அறிவித்தார். எனினும், டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார்.
Today's Headlines
🌻The Chief Minister has ordered to open water from Papanasam, Sewalaru and Manimutharu reservoirs.
🌻 Buses are to be operated from six places in Chennai to avoid traffic due to Diwali festival
🌻Pakistan decide to send their countryman to space for the first time in 2022 with the assistance of China announced by Pakistan Information Minister Pawat Chaudhry
🌻The Indian Badminton Player Sindhu Ranked 2nd place and Saina Nehwal in 9th place in the world badminton ranking
🌻 West Indies Cricket Player Dwayne Bravo announced on Thursday that he would retire from International cricket. However, he will continue to play in the T20 league🙏🤝
Prepared by
Covai women ICT_போதிமரம்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...