அக்டோபர் 24
ஐக்கிய நாடுகள் சபை தினம்
திருக்குறள்
அதிகாரம்:விருந்தோம்பல்
திருக்குறள்:82
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
விளக்கம்:
விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.
பழமொழி
Prevention is better than cure
வெள்ளம் வரும் முன்பே அணை போட வேண்டும்
இரண்டொழுக்க பண்பாடு
1. பெரியோர் , பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.
2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.
பொன்மொழி
செய்து முடிக்கப்பட்ட மாபெரும் சாதனைகள் அனைத்தும் செய்ய முடியாதவைகள் என்று முதலில் பலரால் நிராகரிக்கப்பட்டவைதான்
பொது அறிவு
1. ஐக்கிய நாடுகள் சபையின் தற்போதைய பொதுச் செயலாளர் யார்?
அந்தோனியோ கட்டர்ஸ் (Antonio guterres)
2. ஐக்கிய நாடுகள் சபையின் தற்போதைய உறுப்பு நாடுகள் எத்தனை?
193 நாடுகள்
தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்
ஓமம்
1. உடலுக்கு பலம் சேர்க்கக் கூடியது.
2. செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.
3. உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
English words and meaning
Naive. - கபடமற்ற
Nascent - முழு வளர்ச்சி பெறாத
Naught - ஒன்றுமில்லை
Nectar - மலர்த்தேன்
Numerals - எண்கள்
அறிவியல் விந்தைகள்
* இறால் மீனுக்கு இதயம் அதன் தலையில் உள்ளது.
* ஒரு நத்தையால் மூன்று வருடங்கள் தொடர்ந்து தூங்க முடியும்.
*. காண்டா மிருகத்தின் கொம்பு முடியால் ஆனது
* யானையால் குதிக்க முடியாது
நீதிக்கதை
திருடர்கள்
ஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவ மழை தவறி விட்டதால் குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டது. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர் குறைந்து அதிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால் தினமும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மிகவும் சிரமப்பட்டான் தெனாலிராமன்.
இந்த சமயத்தில் ஒரு நாள் இரவு நான்கு திருடர்கள் தன் தோட்டத்தில் பதுங்கி இருப்பதைக் கண்டான். உடனே வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம், "அடியே, நம் நாட்டில் பருவ மழை தவறிவிட்டதால், பஞ்சம் ஏற்பட்டு விட்டது. எனவே நிறைய திருட்டு நடக்க ஆரம்பித்து விட்டது. பஞ்ச காலம் முடியும் வரை நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எனவே நாம் ஒரு காரியம் செய்வோம்" என்று வெளியே பதுங்கியிருந்த திருடர்களுக்கு கேட்கும் வண்ணம் உரத்த குரலில் பேசினான்.
"அதற்கு என்ன செய்யலாம்?" என்று தெனாலிராமனின் மனைவி கேட்டாள்.
"வீட்டிலுள்ள நகை, மற்றும் விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் இந்தப் பெட்டியில் போட்டு பூட்டு. நாம் இந்தப் பெட்டியை யாருக்கும் தெரியாமல் கிணற்றில் போட்டு விடலாம். பஞ்சம் தீர்ந்து திருட்டுப் பயம் ஒழிந்ததும் மீண்டும் கிணற்றிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்" என்று முன்போலவே உரக்கக் கூறினான் தெனாலிராமன். திருடர்களும் இதைக் கேட்டனர்.
அதே சமயம் ரகசியமாக தெனாலிராமன் தன் மனைவியிடம் திருடர்கள் ஒளிந்திருப்பதைக் கூறி ஒரு பழைய பெட்டியில் கல், மண், பழைய பொருட்களை எல்லாம் போட்டு மூடினான். அந்தப் பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கி வந்து கிணற்றுக்குள் 'தொப்'பென்று போட்டு விட்டு வீட்டுக்கு திரும்பிவிட்டான் தெனாலிராமன்.
திருடர்களும், "தெனாலிராமன், வீட்டிற்குள் புகுந்து திருடும் நம் வேலையை சுலபமாக்கிவிட்டான். நாம் எளிதாக கிணற்றிலிருந்து பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்" என்று தங்களுக்குள் பேசிக் கொண்ட்னர்.
பெட்டியை எடுக்க கிணற்றுக்கு அருகே வந்தனர் திருடர்கள். கிணறு ஆழமாக இருந்ததால் உள்ளே இறங்கப் பயந்த திருடன் ஒருவன், "அண்ணே! தண்ணீர் குறைவாகத்தான் உள்ளது. நாம் நால்வரும் ஏற்றம் மூலம் மாற்றி மாற்றி நீரை இறைத்து விட்டால் சுலபமாகப் பெட்டியை எடுத்துக் கொண்டு போகலாம்" என்று கூறினான். அதைக்கேட்ட மற்றவர்களும் அவன் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டனர். அதன்படி ஒருவர் மாற்றி ஒருவர் ஏற்றம் மூலம் நீர் இறைக்கத் தொடங்கினர்.
சற்று நேரம் கழித்து வேறு வழியாக தோட்டத்திற்கு சென்ற தெனாலிராமன், திருடர்கள் இறைத்து ஊற்றிய நீரை தன் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கும், கொடிகளுக்கும், பயிர்களுக்கும் பாயுமாறு கால்வாயைத் திருப்பி விட்டான்.
இப்படியே பொழுது விடிந்தது விட்டது. ஆனால் கிணற்றில் தண்ணீர் குறையவில்லை. இதனால் திருடர்களும், "நாளை இரவு மீண்டும் வந்து நீரை இறைத்து விட்டு பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்" என்று பேசிக் கொண்டு சென்றனர்.
அப்போது தோட்டத்திலிருந்து வந்த தெனாலிராமன் அவர்களைப் பார்த்து, "நாளைக்கு வரவேண்டாம். நீங்கள் இறைத்த தண்ணீர் இன்னும் மூன்று தினங்களுக்குப் போதும். எனவே மூன்று தினங்கள் கழித்து வந்தால் போதும். உங்கள் உதவிக்கு நன்றி நண்பர்களே!" என்று கூறினான்.
திருடர்களுக்கு இதைக் கேட்டதும் மிகவும் அவமானமாய் போய்விட்டது. தங்களை ஏமாற்றி நீர் இறைக்கச் செய்த தெனாலிராமனின் அறிவை மனத்திற்குள் எண்ணி வியந்தனர். மேலும் அங்கே இருந்தால் எங்கே மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடித்தனர் திருடர்கள்.
இன்றைய செய்திகள்
24.10.18
* சீனாவின் வூஜென் நகரில் வரும் நவம்பர் 7ம் தேதி சர்வதேச இணைய மாநாடு நடைபெற உள்ளது. சீனாவின் சைபர் ஸ்பேஸ் நிர்வாகம் மற்றும் ஜீஜியாங் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள இம்மாநாடு மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
* நாடு முழுவதும் தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது அனைத்து மத பண்டிகைகளுக்கும் பொருந்தும்.
* சீனாவையும், ஹாங்காங்கையும் இணைக்கும், 55 கி.மீ., நீளமுள்ள, உலகின் மிக நீண்ட கடல் பாலம் நேற்று திறக்கப்பட்டது.
* ஆல்ரவுண்டர் பாபா இந்திரஜித், தமிழக ரஞ்சி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
* சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் ஆசிய போட்டி சாம்பியன் ஜப்பானை 9-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது இந்தியா.
Today's Headlines
🌻International Internet Conference will be held on November 7 in Wuhan, China. The conference, organized by China's Cyber Space Administration and the state government of Zhejiang, would take place for three days.
🌻The Supreme Court granted permission to crack the crackers only for two hours in Deepavali across the country. This applies to all religious festivals.
🌻 The world's longest sea bridge about 55 km long which connect China and Hong Kong was opened yesterday.
🌻All rounder Baba Indrajith has been appointed as a captain of the Tamil Nadu Ranji Trophy.
🌻In the championship hockey tournament, the Asian Champion Japan been won by India to 9-0.🤝
Prepared by
Covai women ICT_போதிமரம்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...