Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.10.18

திருக்குறள்


அதிகாரம்:விருந்தோம்பல்

திருக்குறள்:81

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

விளக்கம்:

வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்.

பழமொழி

Laugh away your fears

 இடுக்கண் வருங்கால் நகுக

இரண்டொழுக்க பண்பாடு

1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.

 பொன்மொழி

வெற்றி என்பது நிரந்தரமல்ல தோல்வி என்பது இறுதியானதுமல்ல!

                   - பில்கேட்ஸ்

பொது அறிவு

1.நவீன ஒலிம்பிக்கின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

   பியார்  டி  கூபர்டின்

2. இந்தியாவின் தற்போதைய சட்ட அமைச்சர் யார்?

   ரவிசங்கர் பிரசாத்

தினம் ஒரு நறுமண பொருளின் மகத்துவம்

மிளகு



1. இதனை தினமும் உணவில் சேர்த்து வர சளித் தொல்லை நீங்கும்.

2. சோர்வை நீக்கும் வல்லமை பெற்றது.

3. வாய் துர்நாற்றத்தை போக்கக்  கூடியது.

English words and meaning

Mastery.  திறமை
Militant.   சண்டையிடும் மனநிலை
Mistrust.    சந்தேகித்தல்
Murk          இருள்சூழ்ந்த
Menace.  அதட்டல்

அறிவியல் விந்தைகள்

குயில்

* ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் பறவை இனம்.
* இதன் குரல் மிகவும் இனிமையானது
* ஆனால் இதற்கு கூடு கட்டத் தெரியாது. எனவே மற்ற பறவைகளின் கூடுகளில் முட்டை இடும்.
* இந்தியக் குயில்கள் காக்காவின் கூட்டில் முட்டை இடும்..

நீதிக்கதை

புலவர்

 ஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர் வந்திருந்தார். அவர் சகல சாஸ்திரங்களையும் அறிந்த புலவர். தம்மை போல யாரும் புலமை பெற்றவர் இருக்கமுடியாது என ஆணவம் கொண்டவர். அதனால் ஒவ்வொரு ஊராக சென்று அங்குள்ள புலவர்களையெல்லாம் வாதத்திற்கு அழைத்து வெற்றி பெற்று, பெருமையாக திரிந்து கொண்டிருந்தார். அவ்வாறே ஒருநாள் விஜயநகரத்திற்கும் வந்தார்.

அவர் இராயரின் அவைக்கு வந்து தன் திறமையை வெளிப்படுத்தினார். அந்த அவையில் பெத்தண்ணா, சூரண்ணா, திம்மண்ணா போன்ற புலவர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வல்லவர்கள். அவர்கள் கூட வித்யாசாகரை கண்டு அஞ்சி பின்வாங்கினர். தன்னிடம் வாதிட யாரும் முன்வராதது கண்ட வித்யாசாகர் ஆணவமுற்றார். தன் அவையில் சிறந்தவர்கள் இல்லையோ என இராயருக்கோ வருத்தம்.

அந்த சமயத்தில் தெனாலிராமன் அவை முன் வந்து "பண்டிதரே! உம்மிடம் வாதம் புரிய நான் தயார். இன்று போய் நாளை வாருங்கள்" என்றான்.

இதை கேட்டதும் மன்னருக்கும், மற்ற புலவர்களுக்கும் உற்சாகமாக இருந்தது. அவர்கள் இராமனை வெகுவாக பாராட்டினர். இருந்தாலும் மறுநாள் வித்யாசாகரை இராமனால் வெல்ல முடியுமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது.

மறுநாள் இராமனை ஆஸ்தான பண்டிதரை போன்ற விலையுயர்ந்த ஆபரணங்களால் அலங்கரித்து அவைக்கு அழைத்து வந்தனர். இராமன் தன் கையில் பட்டுத்துணியால் சுற்றப்பட்ட ஒரு கட்டை வைத்திருந்தான்.

வாதம் ஆரம்பமாகியது. வித்யாசாகர் இராமனின் கையில் இருந்த கட்டைப்பார்த்தார். அது என்னவாக இருக்கமுடியும்? என்று அவரால் ஊகிக்கமுடியவில்லை. எனவே "ஐயா! கையில் வைத்திருக்கிறீர்களே! அது என்ன? " என்று கேட்டார்.

இராமன் அவரை அலட்சியமாகப் பார்த்து, கம்பீரமாக "இது திலகாஷ்ட மகிஷ பந்தனம் என்னும் நூல். இதைக்கொண்டுதான் உம்மிடம் வாதிடப்போகிறேன்!" என்றான்.

வித்யாசாகருக்கு குழப்பம் மேலிட்டது. அவர் இது வரை எத்தனையோ நூல்களை படித்திருக்கிறார். கேட்டிருக்கிறார். ஆனால் இராமன் கூறியது போல் ஒரு நூலைப்பற்றி இதுவரை கேள்விபட்டதில்லை. அந்த நூலில் என்ன கூறியிருக்குமோ? அதற்கு தம்மால் பதில் சொல்ல முடியுமோ? முடியாதோ? என்ற பயம் ஏற்பட்டது. அதனால் நயமாக "வாதத்தை நாளை வைத்துக்கொள்ளலாம்" என்று சொல்லிவிட்டு சென்றார்.

அன்றிரவு வித்யாசாகர் பல்வாறு சிந்தித்து பார்த்தார். இராமன் கூறிய நூல் புரிந்துக்கொள்ள முடியாத நூலாக இருந்தது. இதுவரை தோல்வியே கண்டிராத அவர் இராமனிடம் தோல்வி அடைய விரும்பவில்லை. ஆகவே அந்த இரவே சொல்லிக்கொள்ளாமல் ஊரை விட்டே ஓடிவிட்டார்.

மறுநாள் அனைவரும் வந்து கூடினர். ஆனால் வித்யாசாகர் வரவில்லை. விசாரித்த பொழுது அவர் இரவே ஊரை விட்டு ஓடி விட்டார் என்ற செய்திதான் கிடைத்தது. வெகு சுலபமாக அவரை வென்ற இராமனை அனைவரும் பாராட்டினர்.

மன்னர் இராமனிடம் "இராமா! நீ வைத்திருக்கும் திலகாஷ்ட மகிஷ பந்தனம் என்ற நூலை பற்றி நானும் இதுவரை கேள்விபட்டதேயில்லை. அதை எங்களுக்கு காட்டு!" என்றார்.

இராமன் மூடியிருந்த பட்டுத்துணியை விலக்கினான். ஏடுகள் எதுவும் காணப்படவில்லை. அதற்கு பதிலாக எள், விறகு, எருமையை கட்டும் கயிறு இருந்தது. அதை கண்டதும் எல்லாரும் வியப்புற்றனர்.

இராமன், "அரசே! திலகம் என்றால் எள், காஷ்டம் என்றால் விறகு, மகிஷ பந்தனம் என்றால் எருமை கட்டும் கயிறு. இதன உட்பொருளை வைத்து தான் திலகாஷ்ட மகிஷபந்தனம் என்று சொன்னேன். இதைப்புரிந்து கொள்ளாத புலவர் பயந்து ஓடிவிட்டார்" என்று கூறிச்சிரித்தான். அனைவரும் சிரித்தனர். மன்னர் இராமனை பாராட்டி பரிசளித்தார்.

இன்றைய செய்திகள்

23.10.18

* பொதுமக்கள், நலச்சங்க நிர்வாகிகள், வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு தருவதால், சென்னை நகர் முழுவதும், 100 சதவீதம் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்ற இலக்கை, விரைவில் சென்னை போலீசார் எட்ட உள்ளனர்.

* தமிழகத்தில் உள்ள கோவில்களின் நிலங்களில் இருக்கும் ஆக்கிரமிப்பை 6 மாதங்களில் அகற்ற வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

* சி.பி.எஸ்.இ., என்ற மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளுக்கு, புதிய விதிகள் வெளியிட பட்டுள்ளன. உள் கட்டமைப்பு, மாணவர் சேர்க்கை, இடத்தின் அளவு உள்ளிட்ட அனைத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* முதலாவது ஒருநாள் போட்டியில் 42.1 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இலக்கான 323 ரன்களை எடுத்து இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

* உலக மல்யுத்த போட்டியின் இறுதி சுற்றுக்கு இந்தியாவின் பஜ்ரங் புனியா தகுதிப் பெற்றுள்ளார்.

Today's Headlines

🌻The Chennai Police will soon reach the target of 100% surveillance cameras across Chennai City, with full cooperation from the public, the welfare executive and the merchants.

🌻The Madurai branch has ordered the removal of occupying  places belongs to the  temples ,in Tamil Nadu with in  6 months.

🌻 The Central Board of Secondary Education, CBSE, has issued new rules to alter internal structure, student enrollment,including the size of the place

🌻India won by 323 runs in the first one-day match against West Indies in 42.1 overs.

🌻India's Bajrang Punya qualifies for the final round of World Wrestling Championship🤝

Prepared by
Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive