Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகள் 18 தேர்வு





விராலிமலையில் இலுப்பூர் கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகள் 18 தேர்வு
விராலிமலை,அக்.12
இலுப்பூர் கல்வி மாவட்டத்தின் சார்பாக 46ஆவது ஜவஹர்லால் நேரு  அறிவியல், சுற்றுப்புறக் கண்காட்சி மற்றும் கணிதக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்றது.
தொடக்க விழாவுக்கு வந்திருந்தவர்களை கவரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இரா.சிவக்குமார் வரவேற்றுப் பேசினார்..
இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் க.குணசேகரன் தலைமை தாங்கிப் பேசியதாவது: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் அனைத்து பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் அறிவியல் மற்றும் கணித   கண்காட்சியை நடத்தி வருகின்றனர்...இது போன்ற கண்காட்சியில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்தி தங்களது அறிவியல் திறனை வெளிக்கொணர வேண்டும்..மேலும் இக்கண்காட்சியில் தங்கள் படைப்புகளை கொண்டு வந்துள்ள மாணவர்களை ஆசிரியர்கள் பாராட்ட வேண்டும்..அப்படி பாராட்டும் பொழுது தான் இன்று அறிவியல் கண்காட்சியில் படைப்புகளை வைத்துள்ள மாணவர்கள் நாளை அறிவியல் விஞ்ஞானிகளாக கூட மாறும் வாய்ப்பும் ஏற்படலாம் என்றார்.
முனைவர் இரா.சின்னத்தம்பி குத்துவிளக்கேற்றி வைத்து பேசியதாவது: இன்று நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மாணவர்களின் திறனும்,அவர்கள் செய்து காட்டிய விதமும் பாராட்டுக்குரியது.மாணவர்களிடம் ஆசிரியர்கள் உண்மை,உழைப்பு,உயர்வு பற்றியும்,சேவை,செம்மை,செழிப்பு பற்றியும் எடுத்துக் கூறி ஆசிரியர்கள் நல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும்..புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் அன்னவாசல் ஒன்றியத்தில் ஒரே நேரத்தில் 13 பள்ளிக் கூடங்களை கொண்டுவந்தேன்..ஆனால் இன்று எனது மகனும் சுகாதார துறை அமைச்சருமாகிய டாக்டர் விஜயபாஸ்கர் கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் பல்வேறு திட்டங்களை நம் மாவட்டத்திற்கு கொண்டு வந்து பெருமை சேர்த்துள்ளார்..ஆசிரியர்கள் மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்,பாராட்ட வேண்டும் ..மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கைப் பாடத்தை  கற்றுக் கொடுங்கள் என்றார்..
 மதர் தெரசா கல்வி குழுங்களின் தாளாளர் இரா.சி.உதயக்குமார் கலந்து கொண்டு கண்காட்சியைத் திறந்துவைத்துப்  பேசியதாவது:மாணவர்கள் அனைவரிடமும் திறமைகள் இருக்கும்.. மாணவர்கள் சாதிப்பதற்கு மதிப்பெண்கள் முக்கியம் கிடையாது..அவர்களது ஆர்வம் தான் காரணம்.அதிக மதிப்பெண் எடுப்பவர்களை விட குறைவான மதிப்பெண் எடுத்து ஆர்வம் இருப்பவர்கள் தாங்கள் விரும்பிய படிப்பை தேர்ந்தெடுத்து படித்து சாதிக்கிறார்கள்..எனவே ஆசிரியர்கள் அனைவரும் இங்கு கண்காட்சியில் மாணவர்கள்  வைத்துள்ள படைப்புகளை பார்வையிட்டு அவர்களை வாழ்த்துங்கள்.அப்படி நீங்கள் செய்யும் பொழுது தான் அவர்கள் வெற்றியாளர்களாக வலம் வருவார்கள்..ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஆற்றல் இருக்கும்...எனவே அனைவரிடமும் உள்ள நல்ல விஷயத்தை நாம் பார்த்தோம் எனில் அனைவருக்கும் உங்களை பிடிக்கும்...மேலும் இங்கு வந்துள்ள ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களிடம் உள்ள அறிவியல் ஆர்வத்தை,தாக்கத்தை தூண்ட வேண்டும் என்றார்.
கண்காட்சியில் பள்ளி  மாணவ, மாணவிகளின் படைப்புகளை சிறப்பு விருந்தினர்கள் பார்வையிட்டு அவர்களோடு கலந்துரையாடினார்.
   
அன்னவாசல் கூட்டுறவு சங்க தலைவர் வீ.இராமசாமி வாழ்த்துரை வழங்கினார்.
கண்காட்சியில் விராலிமலை,பொன்னமராவதி,இலுப்பூர்,குன்றாண்டார் கோவில் ஒன்றியங்களைச் சேர்ந்த , நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, தனியார் பள்ளிகள் ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 109பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களது   109 படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
கண்காட்சியில் வாழ்க்கையில் சவால்களுக்கான அறிவியல் தீர்வுகள் என்ற தலைப்பின் கீழ் விவசாயம் மற்றும் கரிம மேலாண்மை,சுகாதாரம் மற்றும் தூய்மை,வளமேலாண்மை,கழிவு மேலாண்மை,போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு ,கணித மாதிரிகள் ஆகிய பிரிவுகளில் மாணவர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தி வைத்திருந்தனர்.இதில் ஒவ்வொரு  பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த  மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை 1 மாணவர்கள் மட்டும் பங்கு பெறும் படைப்புகள் 20,8 முதல் 10 ஆம் வகுப்பு வரை இரு மாணவர்கள் பங்கு பெறும் படைப்புகள் 15, ஆசிரியர்கள் பங்கு பெறும் படைப்புகள் 10 என மொத்தம் 45 படைப்புகள் சிறந்த படைப்புகளாக தேர்ந்தெடுக்கப்பட்டன.
 தேர்ந்தெடுக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறும் புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.
இதையடுத்து இலுப்பூர் கல்வி மாவட்ட அலுவலர்  க.குணசேகரன்  கண்காட்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
கண்காட்சியில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி,புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி உதவி திட்ட அலுவலர் இரா.இரவிச்சந்திரன்,விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செ.பழனியாண்டி,இலுப்பூர் கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  இலுப்பூர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த மேல்நிலை,உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ,வட்டார கல்வி அலுவலர்கள், முதுகலைபட்டதாரி ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள்,உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சிகளை பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் க.பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.. முடிவில் விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரெ.சுரேஷ் நன்றி கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive