அக்டோபர் 12
உலக கண்ணொளி தினம்
திருக்குறள்
அதிகாரம்:நிலையாமை
திருக்குறள்: 336
நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு.
விளக்கம்:
நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.
பழமொழி
Eat to live and do not live to eat
வாழ உணவருந்து, உணவருந்த வாழாதே!
இரண்டொழுக்க பண்பாடு
1. காலை கடன் கழிக்காமல் மற்றும் தன் சுத்தம் பேணாமல் பள்ளி வர மாட்டேன்.
2. என் வகுப்பறை மற்றும் பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க முயற்சிப்பேன்.
பொன்மொழி
சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.
- அப்துல் கலாம்
பொது அறிவு
1.2018 காமன்வெல்த் போட்டிகள் எங்கு நடைபெற்றது?
ஆஸ்திரேலியா
2. இத்தாலி நாட்டின் தலைநகரம் எது?
ரோம்
தினம் ஒரு உணவின் மகத்துவம்
சீரகம்
1. இது உடல் சூட்டை சீரடைய செய்கிறது.
2. சிறுநீரகத்தை பாதுகாக்கிறது.
3. சீரகநீர் சீரண சக்தியை அதிகரிக்க செய்கிறது.
4. நிறைய மருத்துவ குணத்தைக் கொண்டுள்ளது.
English words and meaning
Harvest. அறுவடை
Hark. உற்றுக்கேள்
Hades நரகம்
Hicc ough. விக்கல்
Hierarch. பிரதான குரு
அறிவியல் விந்தைகள்
புரதம்
* மனித உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டசத்துக்கள் ஆறில் புரதமும் ஒன்று.
* இது மனித உடலின் திசுக்களை கட்டும் பணியை செய்கிறது.
* பருப்பு வகைகள் மற்றும் மீனில் புரதம் மிகுந்து காணப்படுகிறது.
* இறைச்சி மற்றும் முட்டையில் முழுமையான புரதம் காணப்படும்.
நீதிக்கதை
உயர்ந்தவர் யார்?
விஜயநகரத்தை பேரரசர் கிருஷ்ணதேவராயர் ஆண்டு வந்தார். அவருடைய அவைப் புலவர்களின் மகுடமாகத் திகழ்ந்தவர் தெனாலிராமன். அரசருக்கு வலது கரமாகத் திகழ்ந்த தெனாலியை அரசர் முற்றிலுமாக நம்பினார். அவரின் ஆலோசனைபடி ஆட்சி நடத்தினார்.
தெனாலிராமனின் அறிவையும், புத்தி சாதுர்யத்தையும், அவரது நகைச்சுவை உணர்வுகளையும் பற்றி கேள்விப்பட்டார் அண்டை நாட்டு அரசர் புஷ்யமித்திரன்.
அவர் கிருஷ்ணதேவராயரைத் தனது நாடான கஞ்சன்புரிக்கு அழைத்தார். அத்துடன், ""தெனாலிராமனின் புத்திக்கூர்மை பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறோம், அவரையும் உடன் அழைத்து வாருங்கள்,'' என்று வேண்டினார்.
இருவரும் கஞ்சன்புரியை அடைந்தனர். புஷ்யமித்திரன், தங்கம் போல் ஜொலிக்கும் ஒரு மாளிகையில் அவர்களை தங்க வைத்தார். அங்கு நாற்புறமும் ரத்தினங்களும், முத்துக்களும் இழைக்கப்பட்டிருந்தன. தங்கப் பாத்திரங்களில் உணவு கொண்டு வந்து தங்கத் தட்டு வைத்து, உணவு படைத்தான். அதையெல்லாம் கண்டு கிருஷ்ணதேவராயரும், தெனாலிராமனும் அசந்து போயினர். சில நாட்கள் அந்த ராஜ உபசாரத்தில் திளைத்து மகிழ்ந்தனர்.
ஒருநாள் மாலை படகுச்சவாரி செய்யும்போது அரசர் புஷ்யமித்திரன் சட்டென்று தெனாலிராமனிடம், ""உங்கள் அரசர், நான், இருவரில் மிகப் பெரியவர்; உயர்ந்தவர்; மேன்மையானவர் யார்?'' என்றார். அதைக் கேட்டதும் தெனாலி ராமன் சற்று நேரம் பதில் கூறவில்லை. பிறகு சிரித்தவாறு, ""அரசே! என்னைப்பொறுத்த வரையில், நீங்கள் இருவருமே மிக உயர்ந்தவர்கள்தான். உங்களுடைய வைபவம் மலைச் சிகரம் போன்றது என்றால், அரசர் கிருஷ்ண தேவராயரின் உயர்வு சலசலத்துப் பாயும் அழகிய நதியைப் போன்றது...'' என்றார்.
உடனே புஷ்யமித்திரன் சிரித்தவாறு, ""கிருஷ்ணதேவராயரே! தீர்ப்பு கிடைத்து விட்டது. தெனாலிராமன் என்னை மலைச் சிகரம் என்று உயர்த்திக் கூறி விட்டார். எனவே, நானே உயரமானவன்,'' என்றான். தெனாலிராமனைத் திரும்பிப் பார்த்தார் கிருஷ்ண தேவராயர்.
அப்போது தெனாலி சிரித்துக் கொண்டே, ""அரசே! புஷ்ய மித்திரன் என்னுடைய பேச்சின் பொருளைப் புரிந்து கொள்ளவில்லை. நான் சொன்னது இப்படித்தான்.
""கஞ்சன்புரியில் புஷ்யமித்திரரின் நிலை ஒரே இடத்தில் உள்ள ஏதோ ஒரு மலைச் சிகரம் போன்றது என்பதுதான். எல்லா வளமும் அரண்மனையோடு சரி. மக்கள் துன்பத்திலும் அமைதியற்றும்தான் இருக் கின்றனர். மாறாக, கிருஷ்ணதேவராயரைப் பொறுத்தவரையில், "நதி எப்படித் தேசம் முழுவதும் பாய்ந்து, நாட்டின் பூமியை வளப்படுத்துகிறதோ அதே போன்று தனது செல்வம் முழுவதையும் அரண்மனைக்குள் மட்டும் அடைத்துப் போட்டுக்கொள்ளாமல், அவர் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்து கிறார்' என்பதே நான் கூறியதன் பொருள். இப்போது யார் உயர்ந்தவர்; மேன்மையானவர்; என்பதை நீங்களே யோசித்து முடிவு செய்துகொள்ளுங்கள்,'' என்றார்.
ஒருசில கணங்கள் புஷ்யமித்திரரின் முகம் கருத்து விட்டது.
பிறகு சமாளித்துக் கொண்டு, ""அரசர் கிருஷ்ணதேவராயரே! நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள்; நான் தோற்று விட்டேன். தெனாலிராமன் தனது புத்தி சாதுர்யத்தை மட்டும் வெளிப்படுத்திக் காட்டவில்லை. நாட்டை ஆள்வதற்கான நல்ல வழிகளையும் எனக்குக் காட்டி விட்டார்,'' என்ற புஷ்யமித்திரன் தெனாலியை அன்புடன் ஆரத் தழுவிக் கொண்டார்.
இன்றைய செய்திகள்
12.10.18
* புதுச்சேரியில் இருந்து, முதல் முறையாக, தாய்லாந்து நாட்டின், பாங்காக் நகருக்கு, விமான போக்குவரத்து துவங்கிஉள்ளது.
* தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவ.,3,4,5 தேதிகளில் 20,567 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
* விண்ணில் செலுத்தப்பட்ட ரஷ்ய ராக்கெட் நடுவானில் கோளாறானதை தொடர்ந்து அதிலிருந்த விண்வெளி வீரர்கள் அவசரமாக தரையிறங்கி உயிர் தப்பினர்.
* ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வில் வித்தைப் பிரிவில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங்கும், 100 மீ ஓட்டத்தில் நாராயண் தாக்குரும் தங்கப் பதக்கம் வென்றனர்.
* சுல்தான் ஜோஹர் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி 5-4 என்ற கோல் கணக்கில் நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
Today's Headlines
🌻 For the first time, Puducherry has started flights from Puducherry to Bangkok ,Thailand.
🌻Transport Minister Vijayabaskar has said that 20,567 special buses will be operated on November 3rd and 4th for the Diwali festival.
🌻After the disaster in the Russian rocket in the medieval to the space, the space astronauts landed in a hurry to escape .
🌻Harvinder Singh of India in the Archery and Narayan in the 100m running won the gold medals in Asian Paralympic games
🌻In the Sultan Johor Cup junior hockey tournament, the Indian men's team defeated the current champions, Australia for 5-4 to reach the semifinals.🎖
Prepared by
Covai women ICT_போதிமரம்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...