மீண்டும் புத்துயிர் பெறும் வின் ஆம்ப்!
கணினிகளை பயன்படுத்தும் இன்றைய குழந்தைகளுக்கு வேண்டுமானால் `வின் ஆம்ப்' பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் 90களைச் சேர்ந்தவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். பாடல்களைக் கேட்கையில் ஃப்ளாஷ் விஷூவல்களைக் கொண்ட இதன் கிராபிக்ஸ் தொழில்நுட்பங்கள் கணினியை அலங்கரிக்கும்.
MP3 பாடல்களை ஒளிபரப்பும் இந்த வின் ஆம்ப் மென்பொருளின் முதல் வெளியீடு 1997ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த கொஞ்ச நாட்களிலேயே 30 லட்சம் பதிவிறக்கத்தை தொட்டு சாதனை படைத்தது. தொடர்ந்து பயனர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து 2000களில் விண்டாஸ் நிறுவனத்தின் மென்பொருள் பட்டியலில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருள் என்ற சாதனையைப் படைத்தது. பின்னர் விண்டோஸ் 98, விண்டோஸ் 2000, சர்வீஸ் பேக் சீரிஸ், விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் XP, உள்ளிட்ட பல்வேறு இயங்குதளங்களுக்கு ஏற்றவாறு உலகம் முழுதும் 18 மொழிகளில் வெளியானது.
நாளடைவில் VLC, MX Player போன்று பாடல்களுடன் சேர்ந்து வீடியோக்களையும் ஒலி/ஒளிபரப்பும் மென்பொருட்களின் படையெடுப்புகள் அதிகரிக்கத் தொடங்கின. இவை கால மாற்றத்திற்கு ஏற்ப கணினி மென்பொருளிலிருந்து, மொபைல் செயலிகளாக தங்களை உருமாற்றிக் கொண்டன. இதில் வின் ஆம்ப் தோல்வியடைந்ததன் விளைவாக 2014ஆம் ஆண்டிற்குப் பிறகு இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது.
இந்நிலையில் தற்போது வின் ஆம்ப் மீண்டும் மைக்ரோ சாஃப்டின் நவீன இயங்குதளத்தில் புத்துயிர் பெறவிருப்பதாகத் தகவல்கள் கசிந்து வருகின்றன. வடிவத்தில் மட்டுமல்லாமல் இன்றைய நவீன ஆடியோ ஸ்க்ரிப்ட்களையும் வாசிக்கும் திறன் கொண்டவையாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...