Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Today Rasipalan 4.9.2018

மேஷம் இன்று தாங்கள் நினைத்ததை
சாதித்துக் கொள்ள தகுந்த சூழ்நிலை வந்து சேரும். நீங்கள் இழந்த பதவி, நற்பெயர் மீண்டும் கிடைக்கும். எந்த முடிவையும் அவசரப்படாமல் நிதானமாக எடுக்க வேண்டும். சில வேண்டாத பிரச்சனைகள் உங்களைத் தேடி வரலாம். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 

ரிஷபம் இன்று நல்ல முன்னேற்றம் காணலாம். நீங்கள் இதுவரை பட்ட கஷ்டங்கள் விலகி நன்மையே நடக்கும். வீண் கவலைகளை விடுத்து உங்கள் கடமைகளை சரியாகச் செய்யுங்கள். நீங்கள் முயற்சி எடுத்து செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும். நல்ல காலமாக இது அமையும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9  

மிதுனம் இன்று உடல் ஆரோக்கியம் பெறும். மனக்கவலை நீங்கும். எல்லாவகையிலும் லாபம் கிடைக்கும். வாக்கு வன்மையால் எதுவும் சாதகமாக நடக்கும். நல்ல சிந்தனை உண்டாகும். அறிவுதிறன் அதிகரிக்கும். சில நேரங்களில் மற்றவர்கள் பேசுவதை தவறாக புரிந்து கொள்ள நேரிடும், மனோதைரியம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9 

கடகம் இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும் உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். பிரச்சனைகள் இருந்தாலும் அமைதிக்கு குறைவு இருக்காது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6  

சிம்மம் இன்று சிலர் வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி வரலாம். கடன் தொல்லை கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். பயணம் செய்யும் போது உங்களது உடமைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6 

கன்னி இன்று தொழில் ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். உணவு சம்பந்தப்பட தொழில் செய்பவர்கள் சிறப்பான லாபம் அடையலாம். புதிய தொழில் ஆரம்பிப்பவர்களுக்கு உங்களின் குழந்தைகள் பெயரில் தொழில் ஆரம்பித்தால் நல்ல வளர்ச்சியும், அனுகூலமும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7


துலாம் இன்று உங்களிடம் வேலை செய்பவர்களிடம் கூடுதல் அன்பு செலுத்தவும். கடன் வாங்கியிருந்தால் சரியான முறையில் திருப்பிக் கொடுக்க ஏற்பாடுகள் செய்யவும். அரசாங்க ரீதியிலான பிரச்சனைகள் வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5  

விருச்சிகம் இன்று மேல் அதிகாரிகள் கூறிய படி காரியங்களை செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பெற்றோரின் மூலமாக வேலை கிடைக்கும். உங்களுடன் வேலை செய்பவர்களிடம் அனுசரனையாக செல்லவும். வீணான பிரச்சனைகளும் மனக்குழப்பங்களும் வேண்டாம். விரும்பிய பதவி உயர்வு, பணிஇடமாற்றம், சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 

தனுசு இன்று மேலதிகாரிகளிடம் அனுசரனையுடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம். நல்ல சிந்தனை ஏற்படும். மனோ பலம் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சால் எளிதாக எதையும் செய்து முடிப்பீர்கள். உங்களின் நற்பெயருக்கு பங்கம் வரலாம். தைரியத்தை மட்டும் எப்போதுமே இழக்கக் கூடாது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9  

மகரம் இன்று சகோதரர்கள் வகையில் பகை வரலாம். அவர்களுக்காக விட்டுக் கொடுத்து வாழ்தல் நலம். உத்தியோகஸ்தர்களுக்கு மதிப்பு உயரும். போட்டிகளை சமாளிப்பீர்கள். உங்களுக்கு எதிர்பார்க்காத பதவி கிடைக்கும். சகஊழியர்கள் உங்களுக்காக உழைப்பார்கள். எந்த சவாலையும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் சமாளிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 

கும்பம் இன்று எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். திட்டமிட்டு எதையும் செய்யுங்கள். எதிலும் கவனமாக செயல்படுங்கள். டெக்னிக்கல் சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிபவர்கள் சீரான பலனைக் காண்பார்கள். இரவு பகல் பாராமல் அதிகமான உழைப்பு தேவைப்படும். வரவு அதிகமாக இருக்கும். சிக்கனமாக செலவழிக்கவும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5  

மீனம் இன்று புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். சுபநிகழ்ச்சிகள் சம்பந்தமான எல்லா காரியங்களும் வெற்றிபெறும். துன்பங்கள் விலகும். பணதேவை உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் அவப்பெயர் உண்டாகலாம். பயணங்கள் மூலம் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். திடீர் மன குழப்பம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive