டி.என்.பி.எஸ்.சி நடத்திய வேளாண் அதிகாரி
பணிக்கான தேர்வின் வினாத்தாளில் பிழைகள் இருந்தது தெரியவந்துள்ளது. 28 மற்றும் 71-ஆவது வினாக்களுக்கான அனைத்து விடைகளும் தவறாக வழங்கப்பட்டுள்ளதாக தேர்வர்கள் கூறியுள்ளனர். இந்தியாவில் முதன்முதலாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் 1923-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. ஆனால், அந்த விடை 4 ஆப்ஷன்களிலும் வழங்கப்படவில்லை. அதேபோல், முதல் ரயத்வாரி செட்டில்மெண்ட் எங்கு, எந்த ஆண்டு தொடங்கப்பட்டது என்ற வினாவிற்கும் சரியான விடை ஆப்ஷன்களில் வழங்கப்படவில்லை. இதுதவிர, 24-ஆவது வினாவில் Non cooperation movement-ற்கு ஒத்துழையாமை இயக்கம் என மொழிபெயர்க்காமல், சட்டமறுப்பு இயக்கம் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதனால், தேர்வெழுதியவர்கள் மதிப்பெண்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், இதனை டி.என்.பி.எஸ்.சி கவனத்தில் கொள்ள வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 192 பணியிடங்களுக்காக கடந்த ஜூலை 14-ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்வை 9 ஆயிரத்து 913 பேர் எழுதினர். இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி-யிடம் கேட்டபோது, வல்லுநர் குழுவின் ஆய்விற்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி முடிவுசெய்யப்படும் என விளக்கமளித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...