தமிழ்நாடு
திறந்தநிலை பல்கலையில், மாணவர் சேர்க்கைக்கான அவகாசம், 30ம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை
பதிவாளர், சுப்ரமணியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின், தொலைநிலை படிப்புகளில், ஆகஸ்ட், 31 வரை, மாணவர்கள் சேரலாம் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், மாணவர் சேர்க்கையை, 30ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தர்மபுரி, மதுரை, திருநெல்வேலி மற்றும் நீலகிரியில் உள்ள, பல்கலையின் மண்டல மையங்களில் நேரடியாக சமர்ப்பிக்கலாம் அல்லது www.online.tnou.ac.in என்ற, இணையதளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...