பணி பாதுகாப்பு வழங்கக்கோரி,
கலெக்டர் ராமனிடம் ஆசிரியர்கள் மனு
கொடுத்தனர். வேலூர் அடுத்த, பொய்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த பிளஸ்
1 மாணவர் அருண்பிரசாத், 17, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு,
ஆசிரியர்களே காரணம் எனக்கூறி, கடந்த, 7ல், அவரது உறவினர்கள் பள்ளியை
முற்றுகையிட்டு, ஆசிரியர்களை தாக்கினர். இந்நிலையில், வேலூர் மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தலைமையில், அனைத்து ஆசிரியர் இயக்கங்களின்
கூட்டமைப்பு நிர்வாகிகள், நேற்று கலெக்டர் ராமனை சந்தித்து மனு கொடுத்தனர்.
அதில், ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க
வேண்டும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என
தெரிவித்திருந்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.Revision Exam 2025
Latest Updates
Home »
» Teachers பணி பாதுகாப்பு கேட்டு ஆசிரியர்கள் மனு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...