இந்தியாவில் ஒரு மாநிலத்தில் எஸ்சி/எஸ்டி சலுகைகளை
பெறும் மக்கள்,
வேறு மாநிலத்திற்கு இடம்மாறி அதே சலுகையை பெற முடியாது என்று அரசியல் சாசன
பென்ச் ஆணையிட்டுள்ளது.நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அதன்படி, ஒரு மாநிலத்தில் எஸ்சி/எஸ்டி பிரிவில் சலுகை பெறும் மக்கள் வேறு மாநிலத்திற்கு இடமாறினால் அந்த சலுகையை பெற முடியுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எஸ்சி/எஸ்டி பிரிவு மக்கள், ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு நிரந்தமாக இடம்பெயர்ந்தால் அவருக்கு சலுகைகள் வழங்கப்படாது என்று அதிர்ச்சி அளிக்கும் தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதாவது ஒரு மாநிலத்தில் எஸ்சி/எஸ்டி பிரிவாக கருதப்படும் மக்கள், இன்னொரு மாநிலத்தில் அப்படி கருத்தப்படமாட்டார்கள் என்று அரசியல் சாசன அமர்வு கூறியுள்ளது.
இதற்கு அரசியல் சாசன அமர்வு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, ஒரு மாநிலத்தில் சில பிரிவினர் எஸ்சி/ எஸ்டியா கருதப்படுகிறவர்கள், எல்லா மாநிலத்திலும் அப்படி கருதப்பட வாய்ப்பில்லை. அதனால், சலுகைகள் மாறுபடும்.
இதனால் எஸ்சி/ எஸ்டி பிரிவு மக்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இதனால் இடஒதுக்கீடு வழங்கப்படாது என்றுள்ளனர். இதனால் 341 மற்றும் 342 சட்டத்தின்படி, சில நேரங்களில் எஸ்சி/எஸ்டி மக்கள் சில சலுகைகளை தியாகம் செய்ய வேண்டும். அதன்படி, வேறு மாநிலத்திற்கு மாறும் சமயங்களில், சில சலுகைகளை தியாகம் செய்ய வேண்டி இருக்கும்.
ஆனால் மிகவும் அவசியம் தேவைகளின் போது, இடம்மாறும் மாநிலத்தில் உரிய ஆவணங்களை அளித்து, அந்த மாநிலத்திற்கு உரிய சலுகைகளை பெற வாய்ப்புள்ளது. இது மாநிலம் மாநிலத்திற்கு மாறும் என்று கூறியுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...