Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Jio Giga Fiber Starts Now!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜிகாஃபைபர்
பிராட்பேன்ட் சேவைகள் ஆகஸ்டு 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் பிராட்பேன்ட் சேவைக்கு ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதிகளவு முன்பதிவு பெறும் பகுதிகளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சேவை வழங்கப்படும் என ஜியோ அறிவித்துள்ளது.


முழுவீச்சில் சேவைகள் துவங்கப்படும் முன்பாகவே பிரீவியூ சலுகை சில வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரீவியூ சலுகையின் படி ஜியோ ஜிகாஃபைபர் சேவையை பயன்படுத்துவோருக்கு முதல் மூன்று மாதங்களுக்கு வேகத்தை சோதனை செய்ய திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில் 90 நாட்களுக்கு மொத்தம் 300 ஜிபி டேட்டா பிரீவியூ சலுகையின் கீழ் வழங்கப்படுகிறது. இந்த டேட்டாவில் மாதம் 100 ஜிபி என பிரிக்கப்பட்டுள்ளது. இந்த டேட்டா வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
எனினும், 100 ஜிபி டேட்டாவை ஒரே மாதத்திற்குள் பயன்படுத்திவிட்டால், பிரீவியூ சலுகையை மேலும் கவர்ச்சிகரமாக மாற்றுகிறது. பிரீவியூ சலுகையில் மைஜியோ ஆப் அல்லது ஜியோ வலைத்தளம் மூலம் சேர்பவர்களுக்கு 40 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
ஜியோ ஜிகாஃபைபர் திட்டத்தில் டேட்டா வேகத்தை பொருத்த வரை நொடிக்கு 1 ஜிபி வேகம் வழங்கப்படுவதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. அந்த வகையில் பயனர்கள் 4K தரம் கொண்ட வீடியோக்களையும் ஸ்டிரீம் செய்து கண்டுகளிக்க முடியும். முன்பதிவு செய்யக்கோரும் வலைத்தளத்தில் ஜிகாபிட் பிராட்பேன்ட் சேவையை பயன்படுத்தும் போது விர்ச்சுவல் ரியாலிட்டி கேம்களை விளையாட முடியும்.
ஏற்கனவே குறிப்பிடப்பட்டதை போன்று ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் திட்டத்தை பயன்படுத்த பாதுகாப்பு முன்பணமாக ரூ.4,500 செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தில் ஜிகாஹப் ஹோம் சேவைக்கான நுழைவுத்தளமாக இருக்கும். முதற்கட்ட முன்பண கட்டணம் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஜியோ மனி அல்லது பே.டி.எம். மூலம் செலுத்த முடியும். மொபைல் வயர்லெஸ் சேவையை போன்றே பிராட்பேன்ட் சேவைகளும் பிரீபெயிட் திட்டங்களுடன் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.
90 நாட்கள் பிரீவியூ திட்டம் நிறைவுற்றவுடன் வாடிக்கையாளர்கள் பிரீபெயிட் திட்டங்களுக்கு கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் ஆப்ஷன் வழங்கப்படும். சேவையை தொடர விருப்பமில்லாதவர்கள் தங்களது சேவையை துண்டித்து, பாதுகாப்பு முன்பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive