இன்ஜினியரிங் படிப்புக்கான, ஜே.இ.இ., நுழைவு
தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு, இன்று
துவங்குகிறது.பிளஸ் 2 மற்றும் டிப்ளமா இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள்,
மத்திய அரசின், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில்,
பி.இ., மற்றும் பி.ஆர்க்., படிப்பில் சேர, நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற
வேண்டும்.
இதற்காக, மத்திய அரசின் சார்பில், ஜே.இ.இ., என்ற ஒருங்கிணைந்த நுழைவு தேர்வு, பிரதான தேர்வு மற்றும் அட்வான்ஸ்டு தேர்வு என, இரண்டு வகைகளில் நடத்தப்படுகின்றன.முதல் கட்ட பிரதான நுழைவு தேர்வை, சி.பி.எஸ்.இ.,யும், அட்வான்ஸ்டு தேர்வை, ஐ.ஐ.டி.,க்களும் நடத்தி வந்தன. முதற்கட்ட பிரதான நுழைவு தேர்வை, இந்த ஆண்டு முதல், தேசிய தேர்வு முகமை என்ற, 'நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி' நடத்துகிறது. இந்த பிரதான தேர்வு மட்டுமே, இரண்டு முறை நடத்தப்படுகிறது.அதிகாரப்பூர்வ அறிவிப்புஇந்த தேர்வு தேதியை, தேசிய தேர்வு முகமை, நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. முதல் பிரதான தேர்வு, ஜன., 6 முதல், 20 வரையிலும், இரண்டாவது தேர்வு, ஏப்., 6 முதல், 20 வரையிலும் நடக்க உள்ளது.ஜனவரியில் நடக்க உள்ள தேர்வுக்கு, இன்று முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்குகிறது. www.nta.ac.inமற்றும் www.jeemain.nic.in ஆகிய இணையதளங்களில், செப்., 30 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணத்தை, அக்., 1க்குள் செலுத்த வேண்டும்.
ஜே.இ.இ., தேர்வு, 'ஆன்லைன்' வழியில் மட்டுமே
நடத்தப்படுகிறது. காலை, 9:30 மணி முதல், 12:30 மணி வரையிலும், பிற்பகல்,
2:30 மணி முதல், 5:30 மணி வரை வரையிலும், இரண்டு பிரிவுகளாக, ஆன்லைன்
தேர்வு நடத்தப்படும்.பி.ஆர்க்., மற்றும் பி.பிளான் என்ற கட்டடவியல்
படிப்புகளுக்கு மட்டும், ஆன்லைன் தேர்வுடன், படம் வரையும் திறனுக்கான
எழுத்து தேர்வும், இணைத்து நடத்தப்படும் என, தேர்வு முகமை அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...