பள்ளி கல்வி மேலாண்மை இணையதளத்தில்
விபரங்களை பதிவு செய்ய, கல்வித்துறை தொடர்ந்து பல்வேறு உத்தரவுகளை அறிவிப்பதால், பதிவுகளை நிறைவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மாணவர்களின் பள்ளி விபரம், பெற்றோர், ரத்தவகை, எடை உட்பட பத்துக்கும் மேற்பட்ட தகவல்களை உள்ளடக்கி, ‘ஸ்மார்ட் கார்ட்’ வழங்கும் திட்டம் கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
இதற்கான விபரங்களை பதிவேற்றம் செய்ய, பள்ளிக்கல்வி மேலாண்மை இணையதளம் (எமிஸ்) கொண்டு வரப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும், மாணவர்களின் விபரங்களை இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, கல்வியாண்டு தோறும், பள்ளிகளுக்கு உத்தரவிடப்படுகிறது. இதன்படி, பதிவுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.வழக்கமான தகவல்களோடு, கூடுதலாக சில பதிவுகளை மேற்கொள்ளவும், திடீர் அறிவிப்புகளும் வழங்கப்படுகின்றன. இப்பதிவுகளை மேற்கொள்ளும் போது, சர்வர் பிரச்னை, ‘நெட்வொர்க்’ கிடைக்காமலும், நள்ளிரவிலும் விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டிய நிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
’எமிஸ்’ பதிவுகளிலிருந்து, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியல் தயாரிப்பது, மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்குவது மற்றும் மாணவர் ஆசிரியர் சரிவிகித கணக்கெடுப்பு உள்ளிட்ட அனைத்தையும் செயல்படுத்திக்கொள்ள கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதனால், நடப்பாண்டில், ஆக., 31ம் தேதிக்குள், விடுபட்டுள்ள மாணவர்களின் பதிவுகளை, ‘எமிஸ்’ இணையதளத்தில் பதிவு செய்ய பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டிருந்தது.உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், அந்தந்த வகுப்பாசிரியர்களும், துவக்க நடுநிலைப்பள்ளிகளில், குறிப்பிட்ட ஆசிரியர் இப்பதிவுகளை மேற்கொள்ளும் பணிகளை கவனித்தனர்.
தற்போது, மீண்டும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட விபரங்களில் மாற்றம் ஏற்படும் வகையில், கல்வித்துறை சில மாற்றங்களை செய்ய அறிவுறுத்தியிருப்பது ஆசிரியர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.
பதிவில், மாணவர்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் பதிவு செய்து வருகின்றனர். பதிவுகளை முடித்த பின்பு, இப்போது, தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டிலும், பெயர் பதிவு இருக்க வேண்டுமென கல்வித்துறை தெரிவித்துள்ளதால், அனைத்து மாணவர்களின் பதிவுகளையும் மாற்றி வருகின்றனர். இதில், பெயர் மாற்றம் செய்வதற்கு ‘சர்வர்’, கிடைப்பதில்லை.பதிவுகளை நிறைவு செய்வதற்குள், இன்னும் என்னென்ன அறிவிப்புகள் வருமோ என்ற மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
துவக்கப்பள்ளிகளில் இருக்கும் இரண்டு ஆசிரியர்களில் ஒருவர் இப்பதிவுகளை மேற்கொள்ள ஒதுக்கப்படுவதால், வகுப்புகளின் நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது.
EMIS co ordinator களை ஒரே நேரத்தில் open செய்த எனட்ரி போடச் சொல்ல வேண்டும். இப்படி செய்தால் EMIS வண்டவாளம் தெரியும்
ReplyDeleteEMIS co ordinator களை ஒரே நேரத்தில் open செய்த எனட்ரி போடச் சொல்ல வேண்டும். இப்படி செய்தால் EMIS வண்டவாளம் தெரியும்
ReplyDelete