ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவங்களின் கடுமையான போட்டியை எதிர்த்து வோடாபோன் நிறுவனம் சமீபத்தில் தனது ப்ரீபெய்ட் பிளான்களில் பல மாற்றங்களைச் செய்து வருகிறது. அதன் படி வோடாபோன் நிறுவனம் ஒரு புதிய ப்ரீபெய்ட் பிளான்னை இன்று அறிமுகம் செய்துள்ளது. புதிய ரூ.597 ப்ரீபெய்ட் பிளான் 167 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் வருகிறது.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.597 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் சேவையும் அதே நன்மைகள் அளிக்கிறது. எனினும், சில மாற்றங்கள் ஏர்டெல் ப்ரீபெய்ட் பிளானில் உள்ளது. அதே போல் ஜியோ நிறுவனம், சந்தையில் இந்த விலையில் செழிப்படியாகும் தரவு நன்மைகளுடன் கொண்ட ரீசார்ஜ் சேவையை ஜியோ வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய ரூ.597 வோடாபோன் ரீசார்ஜ் பிளான்
இந்த புதிய ரூ.597 வோடாபோன் ரீசார்ஜ் பிளான் நாள் ஒன்றுக்கு 10 ஜிபி 4 ஜி டேட்டா உடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் செய்திகள் மற்றும் வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் வரம்பற்ற ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது. ஸ்மார்ட்போன் பயனர்களுக்காக 112 நாட்கள் வேலிடிட்டியுடன் இந்த ரூ.597 பிளான் வருகிறது. அதே நேரத்தில் பியூட்சர் போன் பயனர்களுக்கு மட்டுமே கூடுதலாக 168 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.
ஏர்டெல் இன் ரூ.597 ப்ரீபெய்ட் பிளான்
ஏர்டெல் இன் ரூ.597 ப்ரீபெய்ட் பிளான் நாள் ஒன்றிற்கு 10 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் என 168 நாட்களுக்கு FUP இல்லாமல் வரம்பற்ற அழைப்பு சேவையை ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு வழங்குகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே இந்தத் திட்டம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே இந்தத் திட்டம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோவின் ரூ.999 ரீசார்ஜ் திட்டம்
ஏர்டெல் மற்றும் வோடாபோன் திட்டங்கள் ஜியோவின் ரூ.999 ரீசார்ஜ் திட்டத்துடன் மட்டுமே ஒப்பிட முடியும், இந்த பிளானில் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் செய்திகளை 90 நாட்களுக்கு வழங்குகிறது. ஆனால் மொத்தம் 60ஜிபி 4ஜி டேட்டா வழங்குகிறது. மேலும், ஜியோ வின் இந்தத் திட்டம் சந்தையில் அனைவருக்கும் கிடைக்கிறது.
ரூ.159 திட்டம்
நீங்கள் குறைந்த விலையில் சிறந்த ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்ந்தெடுக்க விரும்பினால், அண்மையில் தொடங்கப்பட்ட ரூ.159 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் 28 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் செய்திகளை வழங்குகிறது.
வோடாபோன் இன் இந்த புதிய ரூ.597 ப்ரீபெய்ட் பிளான்க்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...