
முதல் சுற்றுலா பயணி என்ற பெருமை ஜப்பான் கோடீஸ்வரர் பெற்றுள்ளார். எதற்கு தெரியுங்களா? சந்திரனுக்கு செல்லும் முதல் சுற்றுலா பயணி என்ற பெருமையை ஜப்பான் கோடீஸ்வரர் பெற்றுள்ளார். ஜப்பானை சேர்ந்தவர் யுசாகு மாயிஸாகா. ரூ.21,000 கோடி சொத்துக்களுக்கு சொந்தகாரர். ராக் பாடகராக வாழ்க்கையை துவக்கியவர். தற்போது ஆன்லைன் பேஷன் மால் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரிடம் ஏராளமான விமானங்கள், சொகுசு கப்பல்கள் உள்ளன. ஸ்பேஸ்எக்ஸ் என்ற தனியார் விண்வெளி நிறுவனம், 2023ம் ஆண்டு சந்திரனுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல முடிவு செய்துள்ளது. அதில் முதல் சுற்றுலா பயணியாக யோசாகு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவர், ஓவியம் உள்ளிட்ட அரிய கலை பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த ஆண்டு, ரூ.770 கோடி செலவு செய்து ஒரு ஓவியத்தை வாங்கியுள்ளார். 42 வயதான யோசாகு, ஜப்பான் நாட்டின் கோடீஸ்வரர்கள் பட்டியலில், 18 வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...