Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

காலாண்டு விடுமுறையைக் குழந்தைகளுடன் இப்படியும் கழிக்கலாமே பெற்றோர்களே!



'சனி, ஞாயிறு லீவு விட்டாலே இந்தப் பசங்கள சமாளிக்கிறது கஷ்டம். காலாண்டு தேர்வு முடிந்து ஒரு வாரம் லீவாமே!' என்று கொஞ்சம் பயத்தோடு யோசித்துக்கொண்டிருக்கும் பெற்றோரா நீங்கள், அப்படியெனில் நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரைதான் இது.

``பள்ளி விடுமுறை என்றால் குழந்தைகள் உற்சாகத்தின் எல்லைக்கே சென்றுவிடுவார்கள். அந்த உற்சாகத்தைக் கொஞ்சமும் குறைத்துவிடாமல், அழகாகத் திட்டமிட்டால் இந்தக் காலாண்டு விடுமுறையை அர்த்தபூர்வமானதாக மாற்றிவிடலாம்" என்கிறார் சிறுவர் எழுத்தாளர் விழியன். இவர், குழந்தைகளுக்காக 15 புத்தகங்கள் எழுதியுள்ளார். `பெற்றோர் மேடை' எனும் நிகழ்ச்சியை ஒவ்வொரு வாரமும் ஏற்பாடு செய்து, குழந்தை வளர்ப்புத் தொடர்பான உரையாடலை மேற்கொண்டு வருகிறார். அதில் மருத்துவம், கல்வி, இசை எனப் பலவகையான சாதனையாளர்களுடன் உரையாடச் செய்கிறார்.


 ``முதலில், குழந்தைகளை ஜாலியாக, உடல் களைத்துப்போகும் அளவுக்கு விளையாட அனுமதியுங்கள். அடுத்து, வீட்டு வேலைகளில் அவர்களைப் பங்கேற்கச் செய்யுங்கள். காய்கறிகளைக் கழுவித் தருவது, வீட்டைச் சுத்தமாகப் பராமரிப்பதில் உதவுவது என, அவர்களால் முடிகிற, ஆபத்தில்லாத வேளைகளைப் பகிர்ந்துகொடுங்கள்.




பள்ளிக்குச் செல்லும் நாள்களில் அதிகாலையில் அவரசமாக எழுப்புவதிலிருந்து, அடுத்த நாள் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என்பதால், சீக்கிரமே தூங்கச் செய்வது வரை எல்லாமே மின்னல் வேகத்தில் நடந்திருக்கும். அதனால், அழகான விஷயங்களை அவர்கள் அனுபவிக்க வியலாமல் கடந்துபோயிருப்பர். அதனால், மொட்டை மாடி அல்லது தெருவுக்கு அழைத்துச் சென்று வானத்தைப் பார்க்க வைக்கலாம். நிலா மட்டுமல்ல, நட்சத்திரங்களைப் பார்ப்பது அதிலிருந்து சின்னதாக ஒரு கதை உருவாக்குவது என்பதாகக்கூட மாற்றலாம். முதலில் அலுப்பாக இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால், அதோடு சுவை சேர்ப்பது பெற்றோரின் வேலை. தற்போது, சில ஊர்களில் மழை பெய்துகொண்டிருக்கிறது. அவ்வூர்களில் இப்படிச் செய்ய வேண்டாம்.ஆசிரியர் கேள்வி கேட்பார், மாணவர் பதில் சொல்வார் என்பதுதான் எல்லோரின் மனதில் படிந்துபோன ஒன்று. ஆனால், குழந்தைகள் ஏதேனும் ஒன்றைப் பற்றிக் கேள்வி எழுப்பினால் இரண்டு நன்மைகள் கிடைக்கும். ஒன்று, கேள்விக் கேட்பதைக் கூர்ந்து கவனித்திருக்கிறார்கள். இரண்டாவது, அது குறித்து மேலதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். அதனால், காணும் விஷயங்களில் எல்லாம் கேள்வி எழுப்பச் சொல்லுங்கள். உதாரணமாக, உங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு மரம் இருக்கிறது என்றால், அந்த மரத்தில் பெயர் என்ன, அதன் வயது என்ன, அதன் அறிவியல் பெயர் என்ன... என்று அவர்களுக்குத் தோன்கிற கேள்விகளை எழுப்பச் செய்யுங்கள். அன்றைய இரவில், அந்தக் கேள்விகளைத் தொகுத்து உரையாடுங்கள். அவற்றிற்கான பதில்களைச் சொல்ல வேண்டும் என்பதுகூட அவசியமில்லை. ஆனால், குழந்தைகள் ஒரு விஷயத்தை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள உதவும்.

குழந்தை
டிவியில் கார்ட்டூன் சேனல்களே பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைகளிடம், அந்த நிகழ்ச்சிப் பற்றிக் கேள்விகளைக் கேட்கச் செய்யுங்கள். அவர்களின் கவனம் சற்றே மாறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. மேலும், அந்த நிகழ்ச்சி எந்தளவுக்கு அவர்களின் மனதில் பயணித்திருக்கிறது என்பதை நீங்களும் அறிந்துகொள்ள முடியும். இந்தப் பழக்கம் விடுமுறை முடிந்தும் தொடரும்பட்சத்தில் அவர்கள் யோசிக்கும் விதம் முற்றிலுமாக மாறியிருக்கும். எதுவொன்றையும் மேம்போக்காகப் பார்க்கும் விதத்தில் மாற்றம் இருக்கும்.

வீட்டிலுள்ள புத்தகங்களை அடுக்கச் செய்யலாம். ஒவ்வொரு புத்தகத்தின் பெயரையும் படித்து, அது எந்த வகை புத்தகமோ அதற்கு உரிய இடத்தில் வைக்கும்போது, இத்தனை வகைகளான புத்தகங்கள் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வர். சில புத்தகங்களைப் பார்த்ததும் பிடித்துப்போய் படிக்கத் தொடங்கினால், தடுக்காமல் படிக்க அனுமதியுங்கள். அப்படி ஒரு புத்தகத்தையும் படிக்க விரும்பவில்லை என்றால், அவர்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாங்க வேண்டும் என்ற பாடம் உங்களுக்குக் கிடைக்கும்.

இந்தக் காலாண்டு விடுமுறை என்பது ஒரு வாரக் காலம்தான் என்பதால், நீண்ட தூரம் பயணம் செய்யும் சுற்றுலாவாக அமைத்துக்கொள்ள முடியாது. ஓரிரு நாளில் அதிகபட்சம் நான்கு நாள்களில் சென்று வரும்விதமான பயணங்களை மேற்கொள்ளலாம். வெளியூர் செல்வது சிரமம் எனும் பட்சத்தில், உங்களின் நெருக்கமான நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று ஒருநாள் தங்கலாம். அதேபோல, அவர்களை உங்கள் வீட்டுக்கு அழைக்கலாம். இப்படிச் செய்யும்போது, நண்பர்களின் குழந்தைகளோடு உங்கள் குழந்தையும் நன்கு பழகி, நட்பு அடுத்த தலைமுறைக்கும் பயணிக்கும்.

விடுமுறை என்பது குழந்தைகளுடன் நாம் அதிக நேரம் செலவிடுவதற்கான அற்புதமான வாய்ப்பு என்று நினைக்கத் தொடங்கினால், அடுத்து எப்போது பள்ளிக்கு விடுமுறை விடப்படும் என, உங்கள் குழந்தையோடு நீங்களும் ஆவலோடு காத்திருப்பீர்கள்" என்கிறார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive