''மாணவர்களை சமாளிப்பதால் ஆசிரியர்களின்
ஆயுட்காலம் குறைகிறது,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.தமிழகத்தில், 23 மாவட்டங்களைச் சேர்ந்த, 120 ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்கும் விழா, ஈரோட்டில் நேற்று நடந்தது. விருது வழங்கி, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:நடப்பாண்டில், ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை, 'ஸ்மார்ட் கிளாஸ்' ஆக மாற்றப்படும். படிப்புடன் மாணவர்களை நிறுத்தக் கூடாது.
அவர்களுக்கு கள பயிற்சிக்கான வழிகளை ஏற்படுத்த, முதல்வர் யோசனை தெரிவித்துள்ளார்.இத்தனை பணிகளையும் அரசு திட்டமிட்டாலும், அதை சிறப்பாக செயல்படுத்துவது, ஆசிரியர்களின் பங்காகும்.
வீடுகளில், ஓரிரு குழந்தைகளை சமாளிப்பதையே பெரிய சவாலாக நினைக்கின்றனர்.பள்ளிகளில், 40க்கும் மேற்பட்ட மாணவர்களை சமாளிப்பதால், ஆசிரியர்களின் ஆயுட்காலம் கூட குறைந்து விடுகிறது. அத்தனை அர்ப்பணிப்புடன், ஆசிரியர்கள், தங்கள் பணிகளை மேற்கொள்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
True
ReplyDelete