Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு அலுவலக வரைவுகளில் எவை சரி? எவை தவறு



வரைவுகளில் பிழை தவிர்ப்போம்.:
 அரசு அலுவலக வரைவுகளில் எவை சரி எவை தவறு என்பன குறித்து இங்கு காண்போம்.
அலுவல் சம்பந்தமான செய்தி
வரைவுகளில் பிழை தவிர்ப்போம்.:
அரசு அலுவலக வரைவுகளில் எவை சரி எவை தவறு என்பன குறித்து இங்கு காண்போம்.
1.செயல்முறை ஆணைகள் வரையும் போது பதவிப் பெயருக்குப் பின்னால் "அவர்களின்" என்கிற வார்த்தை தவிர்க்கப்படவேண்டும்.
உதாரணமாக..
வேலூர் மண்டல இணை இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் என்பது தவறு.
வேலூர் மண்டல இணை இயக்குநரின் செயல்முறைகள் என்பது சரி.
இதற்குப் பின்னர் பிறப்பிப்பவர் திரு. இராஜாராம் என்று எழுதவேண்டும்.

2. இதோடு நாம் அன்றாட அலுவல் வரைவுகளில் தவறாகப் பயன்படுத்தும் சில சொற்களையும்/ வாக்கியங்களையும் அவற்றுள் எது தவறு, எது சரி என்பதையும், இணையான தமிழ்ச் சொற்களையும் பின்வருமாறு தருகிறேன்.
பார்வை 1 - ல் கண்ட = தவறு
பார்வை 1 - இல் கண்டுள்ள = சரி
30 - ம் தேதி என்பது தவறு
30 - ஆம் தேதி என்பது சரி.
கடிதப் பொருள் குறித்து எழுதும் போது அதன் இறுதியில் குறித்து, சார்பாக என்று எழுதுதல் தவறு.
தொடர்பாக என்று எழுதுவதே சரி.
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு = தவறு
ஈட்டிய விடுப்பு ஒப்புவிப்பு = சரி
பயணத்திட்டம் = தவறு
பயண நிரல் = சரி.
அய்யா = தவறு.
ஐயா = சரி.
ஊதியப் பட்டியல் = தவறு.
ஊதியப் பட்டி = சரி.
அனுப்புனர் = தவறு.
அனுப்புநர் = சரி.
இயக்குனர் = தவறு
இயக்குநர் = சரி.
நகல் = தவறு.
படி = சரி.
கட்டிடம் = தவறு.
கட்டடம் = சரி.
விபரம் = தவறு.
விவரம் = சரி.
ஆவண செய்யுமாறு = தவறு.
ஆவன செய்யுமாறு = சரி.
( சிலர் ஆவணம் செய்யுமாறு என்று கூட எழுதிவிடுகின்றனர்.)
நிர்வாகம் = தவறு.
நிருவாகம் = சரி.
பொருப்பு = தவறு.
பொறுப்பு = சரி.
விடுமுறை விண்ணப்பம் = தவறு.
விடுப்பு விண்ணப்பம் = சரி.
சில்லறைச் செலவினம் = தவறு.
சில்லரைச் செலவினம் = சரி.
ஆரம்பம், துவக்கம் = தவறு.
தொடக்கம் = சரி.
அனுமதி = தவறு.
இசைவு = சரி.
தமிழில் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதும் அரசுப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் மாவட்ட நிலை, சார்நிலை, தன்னாட்சி நிறுவனங்கள், உள்ளாட்சித் துறையின் சார்நிலை அலுவலகப் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பெற்று அவர்களுக்கு முறையே முதற்பரிசாக ரூபாய் 3000/-ம், 2ஆம் பரிசாக ரூபாய் 2000/-ம், 3ஆம் பரிசாக ரூபாய் 1000/-ம் வழங்கப்படுகின்றன. இதேபோன்று தெரிவு செய்யப்பெற்ற தலைமைச் செயலகத் துறைகள், துறைத்தலைமை அலுவலகங்கள், அரசுப் பொதுத்துறை நிறுவனத் தலைமை அலுவலகப் பணியாளர்களுக்கும் ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்பெறுகின்றன.
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் 1956 இல் இயற்றப்பட்டது.
அரசு ஊழியர்கள் தமிழில்தான் கையெழுத்திட வேண்டும் என்று அரசாணை எண். 1134. நாள்: 21.06.1978 இல் ஆணையிடப்பட்டுள்ளது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive