ஐஐடி - ஜேஇஇ (IIT - JEE) தேர்வு
எழுதுவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது, மத்திய அரசின் தேசிய தகுதித்தேர்வு நிறுவனம் (National Testing Agency). இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், அடுத்த ஆண்டு ஐ.ஐ.டி (IITs)-க்கள், தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (NITs) மற்றும் மத்திய அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும் மத்திய கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கலாம்.
`ஐஐடி - ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கு, செப்டம்பர் 1-ம் தேதி முதல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்' என்று நுழைவுத் தேர்வை நடத்தவுள்ள தேசிய தகுதித் தேர்வு நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவரை ஐஐடி-ஜேஇஇ முதல்நிலை (IIT JEE Main Exam) நுழைவுத் தேர்வை, மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்திவந்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...