பள்ளிக் கல்வி இயக்குனர்
திரு.இராமேஸ்வர முருகன், மாநிலக் கல்வியியல்ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் திரு.அறிவொளி,மெட்ரிக்லேஷன் பள்ளிகளின் இயக்குநர் திரு.கன்னப்பன் மற்றும்முறைசாரா கல்வி இயக்குநர் திருமதி. லதா ஆகியோர் “புதுமையானமுறையில் கல்வி கற்பிப்பதற்கான தேசிய விருதைப் பெற்றமைக்குவாழ்த்துக்களை தெரிவித்தனர்.புதுமையான முறையில் வகுப்பறையில் கற்பித்தலுக்கான தேசிய அளவுபோட்டியில் ஆசிரியர் திலீப் அவர்களின் படைப்பான விளையாட்டுமுறையில் ஆங்கில இலக்கணத்தை கற்பித்தலுக்கான முறையைஅறிமுகப்படுத்தியதற்கான தேசிய விருதினை NCERT ,NCTE நிறுவனங்கள் வழங்கி கௌரவபடுத்தியுள்ளது.
இப்போட்டியில் தேசிய அளவில் 240 மேற்பட்ட ஆசிரியர்களும்,பேராசிரியர்களும் கலந்துகொண்டனர் இறுதி தேர்வில் 17 மாநிலங்களைசார்ந்த 28 ஆசிரியர்கள் தாள்களை சமர்பித்தனர் அதில் தற்போது விருதுகள்அறிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் இருந்து இரண்டு ஆசிரியர்களுக்குஇவ்விருது வழங்கப்பட்டுள்ளது .
ஆங்கிலத்தில் திலீப் சமர்பித்த GAMIFIED GRAMMAR இதில்ஒவ்வொரு ஆங்கில இலக்கணத்திற்கும் ஒரு விளையாட்டைவகுப்பறையிலோ அல்லது விளையாட்டு மைதானத்திலோ விளையாடவைத்து தொடர்ந்து கணினி தொடுதிரையில் விளையாட அதன் பின் தேர்வுஎன்னும் முறையில் இதை வகுப்பறையில் கையாண்டு சமர்பித்தார். ஆசிரியர்களில் இவருடன் பெர்ஜினும் Science with ICT தலைப்பிற்குவிருது பெறுகிறார் .
தமிழக பேராசிரியர்கள் இருவர் இவ்விருதை பெறுகின்றனர்.ஆசிரியபயிற்சி முதல்வர் திரு .சின்னப்பன் Role of games மற்றும் பேராசிரியர்காசிராஜன் ‘Maths puzzles’ என்னும் தலைப்பிற்கும் ஆக மொத்தம்தமிழகத்திலிருந்து நால்வர் இவ்விருதை பெற்றுள்ளது மகிழ்ச்சி.
ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வகுப்பறையில் ஏற்படும்பிரச்சனையை தீர்க்க புதுமையான விஷயங்களை ஒவ்வொரு நாளும்கண்டுபிடித்துக் கொண்டே தான் இருக்கிறோம் . அவ்வாறு தாங்கள் செய்தபுதுமையான முயற்சிகளை பிற ஆசிரியர்களுக்கும் இந்தியா முழுவதும்கொண்டு செல்ல இப்போட்டி சிறந்த வாய்ப்பு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...