கண்களை சுற்றி கருவளையம் இருந்தால் பார்க்கவே நன்றாக இருக்காது. இந்த கருவளையத்தை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே சரிசெய்வது எப்படி என்று பார்க்கலாம்.
முகம் முழுவதும் சீரான சருமம் இருந்தாலும், கண்களை சுற்றி கருவளையம் இருந்தால் பார்க்கவே நன்றாக இருக்காது. சரியாக தூங்காமல், அதிக நேரம் கணினியில் வேலை செய்பவர்களுக்கு கண்களை சுற்றி கருவளையம் இருக்கும். அதை எளிய முறையில் நிரந்தரமாகப் போக்கிட சில இயற்கை சிகிச்சைகள் உள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.
கருவளையத்தைப் போக்கும் புதுமை சிகிச்சைகள்…
ஹோம்மேட் ஹனி ஐ கிரீம்
வெள்ளரி துண்டு - 3
உருளை ஸ்லைஸ் - 3
தேன் - 1 டீஸ்பூன்
கற்றாலை ஜெல் - 1 டீஸ்பூன்
வெள்ளரியையும் உருளைக்கிழங்கையும் நன்றாக கழுவி தனி தனியாக மிக்ஸியில் அரைத்து ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்.
இதில் தேனும், கற்றாலை ஜெல் கலந்து நன்கு கலக்கவும். இப்போது ஹனி ஐ கிரீம் ( homemade honey eye cream) ரெடி.
இந்த கிரீமை கண்களை சுற்றி தடவுவதற்கு முன், பன்னீரால் கண்களை சுற்றி சுத்தமாக துடைத்த பின் இந்த கீரிமை போட வேண்டும். மறுநாள் காலை கழுவி விடலாம். இந்த தினமும் போட்டு வரவேண்டும். தொடர்ந்து 2 வாரங்கள் செய்து வந்தால் நல்ல வித்தியாசம் தெரிவதை காணலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...