தொலை நிலை கல்வியில் பட்டப் படிப்புகளை நடத்த,
தமிழக அரசின், பல பல்கலைகளுக்கு அனுமதி கிடைக்காததால், மத்திய அரசின், 'இக்னோ' பல்கலையில், அதிக மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். இது, தமிழக பல்கலைகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.தமிழக அரசு கட்டுப்பாட்டில், சென்னை பல்கலை, அண்ணா பல்கலை, மதுரை காமராஜ், அழகப்பா, திருவள்ளுவர், பெரியார், தெரசா, தமிழ்நாடு பல்கலை, மனோன்மணியம் பல்கலை உட்பட, 13 பல்கலைகள் செயல்படுகின்றன.இந்த பல்கலைகளில், வழக்கமான தினசரி வகுப்புகள் மட்டுமின்றி, தொலைநிலை கல்வியிலும், இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்பட்டன.இதை நடத்துவதற்கு, மத்திய அரசின், பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., அனுமதி வழங்க வேண்டும். இந்த ஆண்டு, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை, சென்னை பல்கலை, அண்ணா பல்கலை போன்றவற்றில், சில குறிப்பிட்ட படிப்புகளை மட்டும் நடத்த, யு.ஜி.சி., அனுமதி வழங்கியுள்ளது. மற்ற பல்கலைகளுக்கு, தொலைநிலை கல்வி நடத்துவதற்கான அனுமதி கிடைக்கவில்லை. சென்னை பல்கலையில், மூன்று; அண்ணா பல்கலையில், ஒரு பாடத்துக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது.இதனால், இந்த ஆண்டு தொலைநிலை கல்வியில் புதிதாக சேரும் மாணவர்கள், தமிழக பல்கலைகளை விட்டு, மத்திய பல்கலையான, ந்திரா காந்தி தேசிய திறந்தநிலைபல்கலை, 'இக்னோ'வில் அதிகம் சேர்ந்துவருகின்றனர்.இக்னோவில், பலஆண்டுகளாக, திறந்தநிலை மற்றும் தொழிற்கல்வி படிப்புகள், உரியஅனுமதியுடன் நடத்தப்படுவதால், மாணவர்கள் அதிகம் சேர்ந்து வருகின்றனர். இதனால், தமிழகபல்கலைகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.அத்துடன், தமிழக பல்கலைகளுக்கு, தொலைநிலை கல்வி வாயிலாக கிடைத்த வருவாயும் பாதித்துஉள்ளது. இதேநிலை நீடித்தால், பல்கலைகளின் நிதி நிலைமை மோசமாகும்.எனவே, தொலைநிலை படிப்புக்கு விரைந்து அனுமதி பெறும் நடவடிக்கையில், அதிகாரிகள்ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...