எப்பொழுதுமே சாப்பிட ஆரம்பித்தவுடன் நாம் முதலில் செய்யும் காரியம் உணவில் உள்ள கறிவேப்பிலைகளை எடுத்து ஓரமாக வைப்பதுதான். அதுதான் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு. ஏனெனில் நமக்கு தெரிந்தவரை கறிவேப்பிலை என்பது தாளிக்க பயன்படும் ஒரு பொருள் அவ்வளவுதான். ஆனால் உண்மையில் கறிவேப்பிலை ஒரு அற்புத மூலிகையாகும். நாம் ஓரமாக எடுத்து வைக்கத்தான் போகிறோம் என்று தெரிந்தும் ஏன் பழங்காலம் முதலே உணவில் கறிவேப்பிலை சேர்க்கப்படுகிறது என்று நீங்கள் சிந்தித்தது உண்டா?. ஏனெனில் கறிவேப்பிலை பல மருத்துவ குணங்களை கொண்டது. இந்த பதிவில் கறிவேப்பிலை பற்றி இதுவரை நீ இரத்தசோகை கறிவேப்பிலையில் இரும்பு சத்து மற்றும் போலிக் அமிலங்கள் அதிகம் உள்ளது. இரத்தசோகை என்பது உங்கள் உடலில் இரும்பு சத்து குறைவாக உள்ளதால் மட்டும் ஏற்படுவதில்லை, உங்கள் உடலில் உள்ள இரும்பு சத்துக்கள் சரியாக உபயோகிப்படாத போதும் ஏற்படுகிறது. இங்குதான் போலிக் அமிலங்கள் அவற்றின் வேலையை செய்கிறது. போலிக் அமிலங்களின் வேலையே இரும்பு சத்தை உடலை உறிஞ்ச செய்வதுதான். கறிவேப்பிலையில் இந்த இரண்டுமே உள்ளதால் இது இரத்தசோகையை குறைக்கிறது. உங்களுக்கு இரத்தசோகை இருந்தால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சில கறிவேப்பிலை இலைகளை சாப்பிடுங்கள். கல்லீரல் பாதுகாப்பு நீங்கள் அதிகம் குடிப்பவராக இருந்தால் நிச்சயம் உங்கள் கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கும். நீங்கள்தான் கறிவேப்பிலையை அதிகம் உண்ணவேண்டும். ஏனெனில் கறிவேப்பிலை தீங்கு விளைவிக்க கூடிய நச்சு பொருள்களில் இருந்து உங்கள் கல்லீரலை பாதுகாக்கிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலை மட்டும் பாதுகாக்காமல் மற்ற உடலுறுப்புகளையும் சீராக செய்லபட வைக்கிறது. சர்க்கரை நோய் கறிவேப்பிலை உடலிலுள்ள இன்சுலின் சுரப்பியை சீராக செயல்பட வைத்து இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்குகிறது. இதுமட்டுமின்றி இதில் உள்ள நார்ச்சத்துக்கள் சர்க்கரையின் அளவை குறைப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. குறிப்பாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட எடை அதிகமாக உள்ளவர்களுக்கு கறிவேப்பிலை ஒரு சிறந்த மருந்தாகும். இதய நோய் நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புளை கறிவேப்பிலை கரைக்க கூடியது என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதில் உள்ள ஆன்டிஆக்சிடண்ட்கள் இரத்ததில் உள்ள கொழுப்புகளை கரைக்க கூடியது என்றார் சமீபத்திய ஆய்வு நிரூபித்துள்ளது. மேலும் இதிலுள்ள நல்ல கொழுப்புகள் இதயத்தை பாதுகாக்க கூடியது.
செரிமானம் கறிவேப்பிலை இலைகள் இயற்கையாவே உடலை சுத்தப்படுத்தும் பண்புகள் உடையவை. அதேநேரம் இவை செரிமானத்தை ஊக்குவிக்க கூடியவை. ஆயுர்வேதத்தில் கறிவேப்பிலை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற முக்கிய பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது உடலுக்குள் சென்ற உடனேயே செரிமானத்தை ஊக்குவிக்கும் பணியை தொடங்கிவிடுகிறது. வயிற்றுப்போக்கு இது வயிற்றுப்போக்கு பிரச்சினைக்கு மிகச்சிறந்த தீர்வாகும். ஏனெனில் இதில் உள்ள கார்பசோல் அல்கலாய்டு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு வயிற்று பிரச்சினைகளை குணமாக்க கூடியது. மேலும் இது உடலில் உள்ள பித்தத்தின் அளவை குறைக்க உதவுகிறது. வயிற்றுப்போக்கால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் மோரில் சில கறிவேப்பிலை இலைகளை அரைத்து தினமும் இரண்டு முறை குடித்தால் விரைவில் குணமடையும். கீமோதெரபி இது கறிவேப்பிலையில் உள்ள ஒரு அற்புத சக்தியாகும். ரேடியோதெரபி அல்லது கீமோதெரபி சிகிச்சைகள் மேற்கொள்ளும்போது நம் உடலில் அதனால் பல பக்கவிளைவுகள் ஏற்படும். கறிவேப்பிலை இந்த பக்கவிளைவுகளை குறைக்க கூடும்.
இது நம் குரோமோஸோம்க்களை மட்டும் பாதுக்காமல் எலும்புகளையும் சேர்த்து பாதுகாக்கிறது. குறிப்பாக புற்றுநோய் செல்களை அதன் ஆரம்ப நிலையிலேயே இவை அழிக்கக்கூடியவை. சரும பாதுகாப்பு இது உங்களுக்கு வினோதமாக இருக்கலாம். ஆனால் இதுதான் உண்மை. கறிவேப்பிலையில் வலுவான ஆன்டிஆக்சிடண்ட்கள், பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு போன்ற சத்துக்கள் உள்ளது. இதனால் முகப்பரு, சரும அழற்சி போன்ற பல பிரச்சினைகளுக்கு இது சிறந்த மருந்தாக இருக்கிறது. முடி வளர்ச்சி இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். கறிவேப்பிலை முடியின் நிறத்தை பாதுகாப்பதுடன், முடி வளர்ச்சியையும் அதிகரிக்கிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மெல்லிய முடி வேரை வலுவாக்குகிறது, சேதமடைந்த முடிகளை வலுப்படுத்துகிறது மற்றும் முடி உதிர்வை தடுக்கிறது. எனவே இதனை நேரடியாக சாப்பிடுங்கள் அல்லது எண்ணெயில் கலந்து தினமும் தலையில் தடவுங்கள். எடை குறைப்பு எடை குறைப்பில் கறிவேப்பிலை முக்கியப்பங்கு வகிக்கிறது. இதில் உள்ள கார்பசோல் அல்கலாய்டுகள், குறிப்பாக மஹானைபைன், உடல் எடை அதிகரிப்பிற்கு எதிராக செயல்படுவதோடு உடலில் உள்ள கொழுப்புகளையும் குறைக்கிறது. எனவே நீங்கள் சாப்பிடும் உணவுகளில் கறிவேப்பிலை இருக்கும்படி பார்த்துக்கொண்டால் விரைவில் சில கிலோக்கள் உங்கள் உடலில் இருந்து காணாமல் போவதை பார்க்கலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...