‘தூங்கும்போது நான் குறட்டை விட்டேனா? இல்லவே இல்லை’ எனச் சிலர் சண்டைக்கே வருவார்கள்.
குறட்டை விடுவது குற்றம் கிடையாது. ஆனால், கவனிக்க வேண்டிய விஷயம். தொண்டையில் சதை வளர்ந்து, ஆக்ஸிஜன் நுரையீரலுக்குள் கஷ்டப்பட்டு செல்வதால் ஏற்படும் சத்தமே குறட்டை. முன்பு, வயதானவர்களுக்கு மட்டுமே வந்த குறட்டை, தற்போது பதின் வயதிலும் வருகிறது. இதற்கு மிக முக்கியக் காரணம், உடல் பருமன். பெரிய கழுத்து இருப்பவர்கள், குப்புறப்படுத்துத் தூங்குபவர்களுக்கு குறட்டை வரும். உடல் பருமனைத் தவிர்ப்பது, சரியான நிலையில் உறங்குவது, யோகா, மூச்சுப் பயிற்சி போன்றவை குறட்டைப் பிரச்னையில் இருந்து விடுதலை தரும்
குறட்டை விடுவதற்கு முக்கிய காரணம் வாய் வழியே மூச்சு விடுவதாகும். இதனால் உள்நாக்கு அதிர்வதையே குறட்டை என்கிறோம். மேலும், அடினாய்ட்ஸ் வளர்ச்சி அல்லது மூக்கு வழியில் சிறிதளவு அடைப்பு அல்லது வேறு காரணத்தால் வாய் வழியே மூச்சு விட நேரிடலாம் இதன் காரணமாகவும் குறட்டை ஏற்படலாம். இதைத் தடுப்பது என்பது பழக்கத்தை மாற்றிக்கொள்ள செய்வதாகும். வாய் வழியே மூச்சு விடுவதால் ஏற்படும் தீமைகளை எடுத்துச் சொல்லி படிப்படியாக குறைத்து பழக்கத்தை மாற்றுவதால் தடுக்கலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...