மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்
பள்ளியின்
`குட்டி கமாண்டோ படை` மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கிய கோவை
மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், திட்ட இயக்குநர் ரூபன் சங்கர்ராஜ்.திறந்தவெளியில் மலம் கழித் தலைத் தடுக்கும் விழிப்புணர் வில் மும்முரமாக ஈடுபட்டு சாதித் துள்ளனர் `குட்டி கமாண்டோ படை` மாணவர்கள். தமிழகத்தி லேயே கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியைக்கு மட்டும் தேசிய நல்லாசிரியர் விருது கிடைக்க இவர்களே காரணமாக இருந்துள்ளனர்.
கழிப்பறையைப் பயன்படுத் தாமல்,
திறந்தவெளியில் மலம் கழித்தலால் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகள்
ஏற்படுகின்றன. இதனால், திறந்தவெளி மலம் கழித்தலைத் தடுக்க மத்திய, மாநில
அரசுகள் பல்வேறு நடவடிக் கைகளை மேற்கொண்டு வரு கின்றன.
இந்நிலையில், கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மேற் கொண்ட புதுமையான முயற்சி, மக்களிடம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதுடன், இந்த திட் டத்துக்கு பெரும் துணையாகவும் இருந்துள்ளது.
இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மாவட்ட ஊரக
வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர்ராஜ் ஆகியோர் ‘இந்து தமிழ்’
செய்தி யாளரிடம் கூறியதாவது:
திறந்தவெளியில் மலம் கழிப் பதால், மழை பெய்யும்போது கழிவு கள்
குடிநீர் ஆதாரங்களில் கலந்து, மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்து கின்றன.
எனவே, அனைத்து வீடு களிலும் கழிப்பிடம் கட்டி, திறந்த வெளி மலம் கழித்தல்
இல்லாத மாவட்டமாக கோவையை மாற்ற முழு முயற்சி மேற்கொண்டோம். அதுமட்டுமின்றி,
கழிப்பிடத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக மக்க ளிடம் விழிப்புணர்வை
ஏற்படுத்த வும் நடவடிக்கை எடுத்தோம். அரசு அலுவலர்கள், கிராம வறுமை
ஒழிப்புச் சங்கம், தன்னார்வத் தொண்டர்கள் உள்ளிட்டோர் மூலம் பல்வேறு
விழிப்புணர்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இது மட்டும் போதாது எனத்
தோன்றியது. அப்போதுதான் `குட்டி கமாண்டோ படை` திட்டம் உருவானது.
‘விசில்' அடித்து களப் பணி
2016-ம் ஆண்டு இறுதியில் கோவை மாவட்டத்தில் உள்ள 560-க் கும்
மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் பயிலும் 5 ஆயிரத்துக்கும் மேற் பட்ட
மாணவர்களைக் கொண்டு ‘குட்டி கமாண்டோ படை’ அமைக்கப்பட்டது. இந்த மாணவர் கள்,
ஊக்குவிப்பாளர்களுடன் அதிகாலையில் வயல், காட்டுப் பகுதிகளுக்குச் சென்று,
திறந்த வெளியில் மலம் கழிப்பவர்களை ‘விசில்’ அடித்து தடுத்து நிறுத்தி,
அதன் தீமைகள், கழிப்பிடம் கட்ட வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினர்.
இதற்காக அந்த மாணவர் களுக்கு தனி பேட்ஜ் வழங்கப் பட்டது.
மேலும், இதில் சிறப்பாகப் பணியாற்றும் மாணவர்களுக்கு சான்றிதழும்
வழங்கப்பட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலையடி வாரப் பகுதியில் அமைந்துள்ள கோவை
மாவட்டத்தின் பல பகுதி கள் வனங்களால் சூழப்பட்டவை. அதிகாலை நேரங்களில் மலம்
கழிக்கச் செல்லும் மலைவாழ் மக்கள், யானை உள்ளிட்ட விலங்குகளின்
தாக்குதல்களுக்கு உள்ளாகினர். அவர்கள் கழிப்பிடங் களைப் பயன்படுத்தும்போது,
விலங்குகளின் தாக்குதல்களில் இருந்து தப்ப முடியும் என்பதை யும் `குட்டி
கமாண்டோ படை` மாணவர்களைக் கொண்டு விளக்கினோம்.
தொடர் முயற்சியால் மாவட்டத் தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில்
உள்ள 228 கிராம ஊராட்சிகளும், திறந்தவெளியில் மலம் கழித்த லற்ற கிராம
ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும், குட்டி கமாண்டோ படையினர் தொடர்
கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிகளில் இது தொடர்பான வருகைப்
பதிவேடும் பராமரிக்கப்பட்டு வருகிறது. திறந்த வெளியில் மலம் கழிக்கும்
இடங்களில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மரக் கன்றுகள்
நடப்பட்டு, பராமரிக்கப் பட்டு வருகின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தொடர் கண்காணிப்பு
2017-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, மதுக்கரை
ஒன்றியம் மலுமச்சம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்
இரா.ஸதி தேர்வு செய்யப்பட்டார். தமிழகத் திலேயே தேசிய நல்லாசிரியர் விருது
இவருக்கு மட்டும்தான் கிடைத்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் `குட்டி
கமாண்டோ படை’யினர்.
"கிராமப் பகுதி மக்களிடம் திறந்தவெளியில் மலம் கழிப்ப தால்
ஏற்படும் பாதிப்புகளை விளக் கவும், அதிகாலையில் அவர்கள் திறந்தவெளியில்
மலம் கழிப்பதைத் தடுக்கவும் எங்கள் பள்ளியின் `குட்டி கமாண்டோ படை`
மாணவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். இதனால், எங்கள் பள்ளியைச்
சுற்றியுள்ள பகுதிகளில், திறந்த வெளியில் மலம் கழித்தல் பெரிதும்
தடுக்கப்பட்டுவிட்டது. எனினும், தற்போதும் எங்கள் மாணவர்கள் தொடர்
கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேசிய அளவிலான நல்லா சிரியர் விருது தேர்வுக்குச் சென்றபோது,
குட்டி கமாண்டோ படையினர் குறித்து விளக்கினேன். தேர்வுக் குழுவினர் மிகுந்த
ஆச் சரியத்துக்குள்ளாகினர். தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்ததற்கு
குட்டி கமாண்டோ படையினர் முக்கிய காரணமாய் விளங்கினர்" என்றார் நல்லாசிரியை
இரா.ஸதி.
இவரது முன்னோர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். எனினும்,
இவர் பிறந்தது, படித்தது எல்லாம் தமிழகத்தில்தான். ஸதி என்றால் பார்வதி
என்கிறார் இவர்.
மக்களிடையே இந்த விழிப்புணர்வு பரவி, திறந்தவெளி மலம்
கழித்தல் இல்லாத மாநிலமாக தமிழகம் மாற வேண்டுமென்பதே இந்த `குட்டி
கமாண்டோக்களின்' இலக்காக உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...