Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அசத்தலாய் ஓர் ஆசிரியர் தின விழா

கல்வியாளர்கள் சங்கமம் எதிர்வரும் ஆசிரியர் தினவிழாவினை முன்னிட்டு கனவு ஆசிரியர்களும்,கலாம் மாணவர்களும் என்னும் பெயரில் காரைக்குடி ராஜராஜன் பொறியியல் கல்லூரியில் இன்று செப்டம்பர் 1 அன்று ஒரு பிரம்மாண்டமான கொண்டாட்டத்தை அரங்கேற்றியது. 
 
இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் ஹயாசிந்சுகந்தி தலைமை வகித்தார்.

விழாவின் தொடக்க உரையை தமிழக தொல்லியல் துறைச் செயலாளர் திரு.உதயச்சந்திரன் இ.ஆ.ப அவர்களின் வாழ்த்துச்செய்தியோடு தொடங்கிய கல்வியாளர்கள் சங்கமம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சதிஷ்குமார் தனது தொடக்க உரையில் ஆசிரியர்களின் பணிநிலை கடந்து, சார்ந்துள்ள இயக்கங்கள் கடந்து தன்னார்வத்துடன் ஒன்றினைந்து தொடர்ந்து ஒன்றுபட்டு இயங்கிவருவதால் ஏற்பட்டிருக்கும் நன்மைகள் குறித்துப்பேசினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த வருமானவரித்துறை கூடுதல் ஆணையர் திரு. நந்தகுமார் இ.வ.ப அவர்கள் ஒவ்வொரு மாணவர்களுக்குள்ளும் ஒளிந்துகிடக்கும் ஆளுமைகளைக் கண்டறிந்து, எந்த ஆசிரியர் மீட்டெடுக்கிறாரோ அவரே! கனவு ஆசிரியர் எனக்குறிப்பிட்டதோடு, ஆசிரியர்கள் மாணவர்களை இந்த சமூகத்துக்குப் பயனுள்ளவர்களாக மாற்றும் வேலையினைச் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டார். தோல்வியிலிருந்து மாணவர்கள் தன் தோல்விக்கான காரணம் தேடினால் வெற்றி தானே கிட்டும் எனவும் குறிப்பிட்டுப் பேசியது அழகு.

மைக்ரோசாப்ட் நிறுவன மேலாளர் ஹரிஹரன் ஆசிரியர்களுக்கு தொழில்நுட்பத்தின் அவசியம் குறித்தும், பங்கேற்பாளர்களோடு பயன்படுத்தும் விதம் கலந்துரையாடல் செய்தார்.அதில் ஆசிரியர்கள் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் பங்குபெற்றனர்.

இந்நிகழ்வில் திருப்பூர் ஆசிரியை ஜீலி அவர்களின் கவிதை நூல்வெளியீடு, மாணவர்களின் தனித்திறன் நிகழ்வுகள், ஆசிரியர் கலந்துரையாடல் என நிகழ்வு சிறப்பாக அமைந்தது..

மாநிலம் முழுவதிலுமிருந்து கலந்துகொண்ட ஆசிரியர்கள்,  பொறியியல் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வியியல் கல்லூரி மாணவர்கள் என 600 க்கு மேற்பட்ட பங்கேற்பாளர்களோடு நிகழ்வு சிறப்பாக அமைந்திருந்தது.






2 Comments:

  1. Sir I have shared my metrial in padasalai how to upload please share ideas

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive