உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதியில் காலாண்டு விடுமுறை முடியும் வரை, அரசு பள்ளிகளை பாதுகாப்பதில் ஊராட்சி நிர்வாகங்கள்
முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடுமலை கல்வி மாவட்டத்தில், குடிமங்கலம், மடத்துக்குளம் மற்றும் உடுமலை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், இரவுக்காவலர்கள் இல்லாததால், பல்வேறு இன்னல்கள் தொடர்ந்து நடக்கிறது. கிராமப்புற பள்ளிகள் இப்பிரச்னையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.
விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் குழந்தைகளும், ஆசிரியர்களும் முதல் பணியாக, பள்ளி வளாகத்தில் சிதறிக்கிடக்கும் கண்ணாடி பாட்டில் துண்டுகளை அகற்றுகின்றனர்.
பள்ளி மேற்கூரையின் ஓடுகள் மற்றும் குழாய்கள் உடைந்திருப்பதும் தொடர்ந்து நடக்கிறது. இந்நிலையில், காலாண்டு விடுமுறையில் பள்ளியின் நிலை என்ன ஆகுமென ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால், ஊராட்சி நிர்வாகங்கள் அந்தந்த பகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளில், கட்டமைப்பு வசதிகளை பாதுகாக்கவும், வளாகத்தில் நடக்கும் சமூக விரோத செயல்களை தடுக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...