காமராஜர், அண்ணா விருது பெற
விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தைத் திங்கள் திருவள்ளுவர் திருநாளில் கீழ்க்காணும் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இவ்விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவம் தமிழ் வளர்ச்சி துறையின் www.tamilvalarchithurai.com என்ற வலைத்தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிப்பவர்கள் தன் விவர குறிப்புகளுடன் நிழற்படம் இரண்டு, எழுதிய நூல்களின் பெயர் பட்டியலுடன் அந்நூல்களில் ஒருபடி வீதம் தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் வளர்ச்சி வளாகம், முதல் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை-8 என்ற முகவரிக்கு வருகிற 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
1. திருவள்ளுவர் விருது - 2019 (திருக்குறள் நெறி பரப்புவோருக்கு.
2. பாரதியார் விருது - 2018 (பாரதியாரின் படைப்புகள் அனைத்தையும் முழுமையாக பயின்று ஆய்வு மேற்கொண்டு பாரதியாரை பற்றிய கவிதைகள் மற்றும் பாரதியின் புகழ் பரப்பும் வகையில் கவிதை, உரைநடை நூல்கள் படைத்தோர், பிற வகையில் தொண்டு செய்தோர், செய்பவர்களுக்கு.
3. பாரதிதாசன் விருது - 2018 (சிறந்த கவிஞர் ஒருவருக்கு.
4. திரு.வி.க. விருது - 2018 (சிறந்த தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு.
5. கி.ஆ.பெ.விசுவநாதம் விருது - 2018 (சிறந்த தமிழ் அறிஞர் ஒருவருக்கு.
6. காமராஜர் விருது - 2018 (தெருவெங்கும் பள்ளிகள் திறந்து, இலவச கல்வித்திட்டம், சத்துணவு திட்டம் முதலிய திட்டங்கள் மூலமாக தமிழ் சமுதாயம் கல்வி எனும் கைவிளக்கு ஏந்தி முன்னேற வழிவகுத்த வரலாறு படைத்த பெருந்தகையாளரின் அடிச்சுவட்டில், தமிழக மக்களுக்கு தொண்டாற்றி வரும் ஒருவருக்கு.
7. அண்ணா விருது - 2018 (தமிழ் சமுதாயம் முன்னேற்றம் காண அயராது பாடுபடும் ஒருவருக்கு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...