சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் வங்கி மேலாண்மை
துறையின் 25வது ஆண்டு விழா கொண்டாட்டம் நேற்று நடந்தது. இதில்கலந்து கொண்ட
பிறகு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அளித்த பேட்டி:
மறுமதிப்பீடு செய்யப்பட்ட மாணவர்கள் தேர்வு தாளில் கூடுதலாக மதிப்பெண்
போடப்பட்டது குறித்து உரிய விசாரணை செய்வதற்கான அனைத்துபணியும் நடந்து
வருகிறது.தவறு செய்தார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஒரே தேர்வு முறை
குறித்து ஆய்வு செய்து வருகிறோம். உயர் கல்வியில் சேர விரும்பும்
திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு அளிக்க பரிசீலி்க்கப்படுகிறது. 94,867
இடங்கள் பொறியியல் கல்லூரியில் காலியாக உள்ளன. கலை மற்றும் அறிவியல்
கல்லூரியில் சேர மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர்.
மேலும், இதற்காகவே அதிகப்படியான அரசு கலைக்கல்லூரிகள் உருவாக்கப்பட்டது. 1,585 புதிய பாடப்பிரிவுகளை உருவாக்கி இருக்கிறார்கள். எனவே, மாணவர் சேர்க்கையும் அதிகரித்துள்ளது. அரசு கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு 20 சதவீத இடங்களை அதிகரித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோல, அரசு உதவிப்பெறும் கல்லூரியில் 15 சதவீதம் கூடுதல் இடங்கள் மாணவர் சேர்க்கைக்கு அரசு அனுமதித்துள்ளது. கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நியமனம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். அவர்களுக்கு தனி போட்டித்தேர்வு வைத்து பணி நியமனம் செய்வது தொடர்பாக அரசு பரிசீலித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...