''கையெழுத்தா இது...? தலையெழுத்து மாதிரி இருக்கு!''
''உன்னோட கையெழுத்து மாதிரி மோசமான எழுத்தை எங்கேயுமே பார்த்ததில்லை..!'' - இவையெல்லாம் நம்முடைய, நம் நண்பர்களுடைய அன்றாட வாழ்க்கையில் நாம் கேட்டும் கடந்தும் வந்தவை...
ஆனால் நேபாளத்தைச் சேர்ந்த பிரக்ரிதி மாலா அத்தகைய விமர்சனங்களைக் கண்டிப்பாக எதிர்கொண்டிருக்க மாட்டார். ஆம், அவரின் கையெழுத்து உலகிலேயே அழகான கையெழுத்தாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. மைக்ரோசாஃப்ட் வோர்டைக் காட்டிலும் அழகான கையெழுத்தைப் பெற்றிருக்கிறார் பிரக்ரிதி.
9-ம் வகுப்பு படிக்கும் பிரக்ரிதி மாலாவின் கையெழுத்து கணிப்பொறியில் இருந்து பிரிண்ட் எடுத்தது போல அத்தனை சரியாக, நேராக இருக்கிறது. எழுத்துகளுக்கு இடையேயான இடைவெளியும் சீராக உள்ளது.
அழகான, தெளிவான எழுத்துகள்தான் படிப்பவரின் மனநிலையைத் தீர்மானிக்கின்றன என்றும் சொல்லப்படுவதுண்டு.
*பிரக்ரிதி மாலாவின் கையெழுத்து*
நேபாளத்தில் உள்ள பிரபல பள்ளியான சைனிக் அவசியா மகாவித்யாலாயா பள்ளி மாணவியான பிரக்ரிதி மாலா, குறிப்பிடத்தகுந்த தன்னுடைய கையெழுத்துக்காக நேபாளி ஆயுதப் படையிடம் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். சமூக வலைதளங்களிலும் அவரின் கையெழுத்து வைரலாகப் பரவி வருகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...