பாட புத்தக தயாரிப்பு பணிகளில், தொய்வு இல்லை' என, பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது
*தமிழகத்தில், பள்ளி கல்வி அமைச்சராக, செங்கோட்டையன் பதவியேற்ற பின், ஒன்று முதல், பிளஸ் 2 வகுப்புகள் வரை புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டங்களை மாற்றும் பொறுப்பு, பள்ளி கல்விச் செயலராக. பணியாற்றிய, உதயசந்திரன் வசம் இருந்தது.
*நடப்பு கல்வியாண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்பு களுக்கு, புதிய பாடபுத்தகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன
*மற்ற வகுப்புகளுக்கு, வரும் கல்வி ஆண்டில் அறிமுகமாக உள்ளன
*இந்நிலையில், பாட புத்தக தயாரிப்பு பணிகளில் தாமதம் ஏற்படுவதாகவும் எழுத்தாளர்கள், மேடை பேச்சாளர்கள் பலர், பாட புத்தக தயாரிப்பு மற்றும் அதன் அம்சங்களில்
*தங்கள் கருத்துகளை திணிப்பதாகவும் புகார்கள் எழுந்தன.
*அதற்கேற்ற வகையில், புதிய பாடத்திட்ட பணிகளை கவனித்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதய சந்திரன், தொல்லியல் துறைக்கு மாற்றப்பட்டார். அதனால், பாட புத்தக தயாரிப்பு பணிகளில், சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின.
*இந்தச் சூழலில், பாடத்திட்ட தயாரிப்பு வல்லுனர் கள் குழுவின் கூட்டம், சில தினங்களுக்கு முன், குழு தலைவர் பேராசிரியர், அனந்த கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
*இதுதொடர்பாக, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
*பாடத்திட்ட தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதற்காக, உழைத்து கொண்டிருக்கும் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை குழுவின் தலைவர் பாராட்டினார்
*புதிய பாடத்திட்டம் அமலானதால், தமிழகம் முழுவதும், 2.29 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது. தனியார் பள்ளி ஆசிரியர்கள், 80 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது
*புதிய பாடத்திட்ட பணிகள், திட்டமிட்ட இலக்கில், வேகமாக நடந்து வருகின்றன. இந்த பணிகளில், எவ்வித சுணக்கமும் இல்லை
*ஒவ்வொரு ஆண்டும், பாட புத்தகங்களில் திருத்தங்கள் செய்யவும், மாற்றம் கொண்டு வரவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எந்த வித தொய்வும் இல்லாமல், பாட புத்தகங்கள் தயாரிக்கும் பணியும் நடக்கிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...