ஆசிரியர்களையும், பள்ளிகளையும் பாதுகாக்க, கடுமையான சட்டம் கொண்டு வர
வேண்டும் என, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கோரிக்கை
வைத்துள்ளனர். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு
கூட்டம், கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாநில தலைவர்
சுரேஷ், பொருளாளர் ஜம்பு, மாவட்ட தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர். இதில், நீட், ஜே.இ.இ., சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த,
முதுநிலை ஆசிரியர்களை, விடுமுறை நாட்களில் பயன்படுத்தக்கூடாது.
ஆசிரியர்களையும், பள்ளிகளையும் பாதுகாக்க, கடும் சட்டம் கொண்டு வர
வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஏழாவது
ஊதியக்குழுவின், 21 மாத நிலுவைத்தொகை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Revision Exam 2025
Latest Updates
Home »
» பள்ளிகளை பாதுகாக்க சட்டம்: ஆசிரியர் கழகம் கோரிக்கை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...