தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் 202 காவல் சார்பு ஆய்வாளர்
(விரல்ரேகை) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஆண், பெண்
மற்றும் மூன்றாம் பாலின தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
இமையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: காவல் சார்பு ஆய்வாளர் (விரல்ரேகை)
காலியிடங்கள்: 202
வயதுவரம்பு: 01.07.2018 அன்று 20 வயது நிறைந்தவராகவும் 28 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். அரசு விதிகளின்படி சில பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
தகுதி: பல்கலைக்கழக மாணிய குழுவினல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து அல்லது கல்வி நிறுவனத்தில் இருந்து 10+2+3 என்ற அடிப்படையில் அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.36,900 - 1,16,600
தேர்வுக் கட்டணம்: ரூ.500. பொதுப்பிரிவு மற்றும் துறைத் தேர்வு ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ரூ.1000 செலுத்துச்சீட்டு அல்லது இணையவழி மூலம் தேர்வுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்கூறு தேர்வு மற்றும் அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnusrbonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.09.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnusrbonline.org என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
மோகன் சார் நான் சுகுமார் சார் , எப்படி இருக்கீங்க.ஒரு சந்தேகம் இதை யார் கிட்டயாவது clarify பண்ண முடியுமா ? அதாவது உயர்நிலைப் பள்ளி தலைமையாசியர் பதவியிலிருந்து மேனிலைப் பள்ளி தலைமையாசிரிராக பதவி உயர்வு பெறும் போது ஏற்கனவே பெற்ப்பட்டு வரும் தனி ஊதியம் ரூ. 2000 த்தை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமா இல்லையா ? தனி ஊதியத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது எனில் அதற்கான அரசானை ஏதாவது இருக்கிறதா என தெளிவு படுத்தினால் உதவியாக இருக்கும் . நன்றி
ReplyDelete