'பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி.,யின், நெட்
தேர்வுக்கு ஆதார் கட்டாயம் இல்லை' என அறிவிக்கப்பட்டு உள்ளது.கல்லுாரிகள்
மற்றும் பல்கலைகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர 'நெட்' அல்லது, 'செட்'
தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தாண்டுக்கான நெட் தேர்வை தேசிய
தேர்வு முகமையான என்.டி.ஏ., நடத்த உள்ளது. டிச., 9 முதல் 23 வரை இந்த
தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் பதிவு செப்., 1ல் துவங்கி, செப்.,
30ல் முடிகிறது.
இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், அடையாள அட்டை எண் பதிவிட அறிவிப்பு செய்யப்பட்டது. அதில் 'ஆதார் எண்ணை பதிவிடலாம்' என கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து, தேர்வர்களால் பல்வேறு புகார்கள் கூறப்பட்ட நிலையில் 'ஆதார் கட்டாயம் இல்லை' என என்.டி.ஏ., அறிவித்துள்ளது.
பாஸ்போர்ட் எண், வருமான வரித்துறை பான்
அட்டை எண், வங்கி கணக்கு எண், ரேஷன் அட்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை
குறிப்பிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...