பிரதமர் மோடியை தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ள கோவையை சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியை ஸதி நேரில் சந்தித்தார்.
தமிழகத்தை சேர்ந்த ஸதி என்ற ஆசிரியைக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தினமான நாளை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நல்லாசிரியர் விருதினை வழங்க உள்ளார். 50 ஆயிரம் ரூபாய் பணம், சான்றிதழ் மற்றும் சில்வர் மெடல் ஆகியவை ஆசிரியை ஸதிக்கு வழங்கப்படும்.
இந்நிலையில் பிரதமர் மோடியை ஆசிரியை ஸதி நேரில் சந்தித்தார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “ ஆசிரியை ஸதி பல பல்வேறு விதமான சமூக மாணவர்களை தனது நடவடிக்கை மூலம் ஒருங்கிணைத்து பள்ளி சேர்க்கையை அதிகரித்துள்ளார். பல யுக்திகளை கையாண்டு அதன் மூலம் அவரின் கிராமத்தை திறந்த வெளி கழிப்பிடமற்ற கிராமமாக மாற்றியுள்ளார். இதுதவிர பல கல்வி சாராத விஷயங்களில் ஈடுபட்டு வரும் ஆசிரியையின் பணி சிறக்க வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...