Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வரலாற்றில் இன்று செப்டம்பர் 6


செப்டம்பர் 6 (September 6)
கிரிகோரியன் ஆண்டின் 249 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 250 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 116 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
394 – உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியஸ் தனது எதிராளியான இயூஜீனியசைப் போரில் தோற்கடித்துக் கொன்றார்.
1522 – பேர்டினண்ட் மகலனின் விக்டோரியா கப்பல் உயிர் தப்பிய 18 பேருடன் எசுப்பானியாவை வந்தடைந்து, முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த கப்பல் என்ற பெயரைப் பெற்றது.
1620 – வட அமெரிக்காவில் குடியேறுவதற்காக இங்கிலாந்தின் பிளைமவுத் துறையில் இருந்து யாத்திரிகர்கள் புறப்பட்டனர்.
1642 – லோங் நாடாளுமன்றம் நாடகங்களை அரங்கேற்றுவதற்குத் தடை விதித்தது.
1803 – பிரித்தானிய அறிவியலாளர் ஜான் டால்ட்டன் வெவ்வேறு மூலகங்களின் அணுக்களை வேறுபடுத்துவதற்கு சின்னங்கள் பயன்படுத்த ஆரம்பித்தார்.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் யுலிசீஸ் கிராண்ட் தலைமையில் கென்டக்கியின் பதூக்கா நகரைக் கைப்பற்றின.
1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் தென் கரொலைனாவின் மொரிஸ் தீவில் இருந்து விலகினர்.
1873 – இலங்கையில் புதிதாக வடமத்திய மாகாணம் அமைக்கப்பட்டு, மொத்தம் இலங்கையின் மாகாணங்கள் ஏழாக அதிகரிக்கப்பட்டது. ஜே. இ. டிக்சன் அதன் முதலாவது அரச அதிபர் ஆனார்.[1]
1885 – கிழக்கு ருமேலியா பல்கேரியாவுடன் இணைந்தது.
1901 – அமெரிக்க அரசுத்தலைவர் வில்லியம் மெக்கின்லி நியூயோர்க்கில் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார்.
1930 – அர்கெந்தீனாவின் அரசுத்தலைவர் இப்போலிட்டோ இரிகோயென் இராணுவப் புரட்சியை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1939 – இரண்டாம் உலகப் போர்: தென்னாப்பிரிக்கா நாட்சி ஜெர்மனியுடன் போர் தொடுத்தது.
1940 – உருமேனியாவின் மன்னர் இரண்டாம் கரோல் பதவி விலகினார். அவரது மகன் முதலாம் மைக்கேல் மன்னராக முடி சூடினார்.
1943 – அமெரிக்காவின் பிலடெல்பியாவில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 79 பேர் உயிரிழந்தனர், 117 பேர் காயமடைந்தனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் எசுத்தோனியாவின் தார்த்தூ நகரைக் கைப்பற்றின.
1946 – இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி டி. எஸ். சேனநாயக்காவினால் ஆரம்பிக்கப்பட்டது.
1951 – தினமலர் நாளிதழ் ஆரம்பிக்கப்பட்டது.
1952 – இங்கிலாந்து, ஆம்ப்சயர் என்ற இடத்தில் வான்காட்சி ஒன்றில் விமானம் வீழ்ந்ததில் 29 பார்வையாளர்கள் கொல்லப்பட்டனர்.
1955 – துருக்கியில் இசுதான்புல் நகரில் கிரேக்கர்களுக்கும் ஆர்மீனியர்களுக்கும் எதிராக இனக்கலவரங்கள் இடம்பெற்றன. பத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
1965 – இந்திய-பாகிஸ்தான் போர், 1965: இந்தியா பாக்கித்தானைத் தாக்கி, லாகூரை ஒரு மணி நேரத்தில் கைப்பற்றப் போவதாக அறிவித்தது.
1966 – தென்னாபிரிக்காவின் இனவொதுக்கலின் காரணகர்த்தா பிரதமர் என்ட்றிக் வெர்வேர்ட் கேப் டவுன் நகரில் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்.
1968 – சுவாசிலாந்து ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
1970 – ஐரோப்பாவில் இருந்து நியூயோர்க் சென்று கொண்டிருந்த இரண்டு பயணிகள் விமானங்கள் பாலஸ்தீனத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு யோர்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
1976 – பனிப்போர்: சோவியத் வான்படை விமானி விக்தர் பெலென்கோ தனது மிக்-25 போர் விமானத்தை சப்பான் ஆக்கோடேட் நகரில் தரையிறக்கு அமெரிக்காவுக்கு அகதிக் கோரிக்கை விடுத்தார். கோரிக்கை ஏற்கப்பட்டது.
1990 – யாழ்ப்பாணக் கோட்டை மீதான புலிகளின் முற்றுகையின் போது இலங்கையின் குண்டுவீச்சு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.
1991 – எசுத்தோனியா, லாத்வியா, லித்துவேனியா ஆகிய பால்ட்டிக் நாடுகளின் விடுதலையை சோவியத் ஒன்றியம் அங்கீகரித்தது.
1991 – உருசியாவின் லெனின்கிராது நகரின் பெயர் மீண்டும் சென் பீட்டர்ஸ்பேர்க் என மாற்றப்பட்டது.
1997 – டயானாவின் உடல் இலண்டனில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 2.5 பில்லியன் மக்கள் தொலைக்காட்சி மூலம் இந்நிகழ்வைப் பார்த்தனர்.
2006 – ஐரோப்பியத் தமிழ் வானொலி, மக்கள் தொலைக்காட்சி ஆகியன ஆரம்பிக்கப்பட்டன.
2007 – ஓச்சாட் நடவடிக்கை: சிரியாவின் அணுக்கரு உலையை அழிக்க இசுரேல் வான் தாக்குதலை மேற்கொண்டது.
2009 – பிலிப்பீன்சில் சம்பொவாங்கா தீபகற்பத்தில் 971 பேருடன் கப்பல் ஒன்று மூழ்கியதில் 10 பேர் மட்டும் உயிர் தப்பினர்.



பிறப்புகள்
1766 – ஜான் டால்ட்டன், ஆங்கிலேய வேதியியலாளர், இயற்பியலாளர் (இ. 1844)
1860 – ஜேன் ஆடம்ஸ், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க சமூகவியலாளர் (இ. 1935)
1889 – சரத் சந்திர போசு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1950)
1898 – சாம். அ. சபாபதி, யாழ்ப்பாண நகரின் 1வது முதல்வர் (இ. 1964)
1911 – ஓ. வி. அழகேசன், தமிழக அரசியல்வாதி (இ. 1992)
1915 – இலங்கையர்கோன், ஈழத்துச் சிறுகதை முன்னோடி (இ. 1961)
1919 – வில்சன் கிரேட்பாட்ச், அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 2011)
1920 – லாரன்சு லேசான், அமெரிக்க உளவியலாளர், கல்வியாளர்
1930 – சாலை இளந்திரையன், தமிழ்ப் பேராசிரியர், சொற்பொழிவாளர், எழுத்தாளார், அரசியற் செயற்பாட்டாளர் (இ. 1998)
1937 – பாரூக் மரைக்காயர், தமிழக அரசியல்வாதி (இ. 2012)
1937 – யஷ்வந்த் சின்கா, இந்திய அரசியல்வாதி
1944 – நிமல் சிரிபால டி சில்வா, இலங்கை அரசியல்வாதி
1968 – சாயிட் அன்வர், பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர்
இறப்புகள்
1566 – முதலாம் சுலைமான், உதுமானியப் பேரரசர் (பி. 1494)
1907 – சல்லி புருதோம், நோபல் பரிசு பெற்ற பிரான்சியக் கவிஞர் (பி. 1839)
1936 – இராபர்ட் இசுடேன்சு, பிரித்தானிய தொழிலதிபர் (பி. 1841)
1966 – மார்கரெட் சாங்கர், அமெரிக்கத் தாதி, கல்வியாளர் (பி. 1879)
1972 – அலாவுதீன் கான், வங்காள சரோது இசைக் கலைஞர் (பி. 1862]])
1979 – பா. கா. மூக்கைய்யாத்தேவர், இந்திய அரசியல்வாதி (பி. 1923)
1997 – ஹரிவான்ஷ் லால் பூன்ஜா, இந்திய அத்வைத வேதாந்தி (பி. 1910)
1998 – அகிரா குரோசாவா, சப்பானிய இயக்குநர் (பி. 1910)
2006 – பி. சி. சேகர், மலேசியத் தொழிலதிபர், அறிவியலாளர் (பி. 1929)
2007 – லூசியானோ பாவ்ராட்டி, இத்தாலியப் பாடகர் (பி. 1935)
2009 – அரிசரண் சிங் பிரார், பஞ்சாப் அரசியல்வாதி (பி. 1919)
2015 – உ. இராதாகிருஷ்ணன், இலங்கை வயலின் இசைக் கலைஞர் (பி. 1943)
சிறப்பு நாள்
விடுதலை நாள் (சுவாசிலாந்து, பிரித்தானியாவிடம் இருந்து 1968)
இணைப்பு நாள் (பல்கேரியா)





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive