Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வரலாற்றில் இன்று செப்டம்பர் 5


செப்டம்பர் 5 (September 5) 


கிரிகோரியன் ஆண்டின் 248 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 249 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 117 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

917 – லியூ யான் தன்னை பேரரசராக அறிவித்து தெற்கு ஹான் பேரரசை தெற்கு சீனாவில் உருவாக்கினார்.

1661 – பதினான்காம் லூயி நாந்து நகரில் மசுகெத்தியர்களினால் கைது செய்யப்பட்டார்.

1666 – இலண்டனின் பெரும் தீ அணைந்தது. 10,000 கட்டடங்கள், 87 தேவாலயங்களும் எரிந்து அழிந்தன. 8 பேர் உயிரிழந்தனர்.

1697 – பிரெஞ்சுப் போர்க்கப்பல் அட்சன் குடாவில் (இன்றைய கனடாவில்) ஆங்கிலேயப் படைகளைத் தோற்கடித்தது.

1698 – உருசியப் பேரரசர் முதலாம் பேதுரு அவரது பிரபுத்துவத்தை மேற்கத்தியமயமாக்கும் முயற்சியில் தாடி வைத்திருப்போருக்கு (மதகுருக்கள், மற்றும் விவசாயிகள் நீங்கலாக) வரி அறவிட உத்தரவிட்டார்.

1781 – அமெரிக்கப் புரட்சிப் போர்: யோர்க்டவுன் முற்றுகையில் பிரித்தானியக் கடற்படை பிரெஞ்சுக் கடற்படையிடம் சரணடைந்தது.

1793 – பிரெஞ்சுப் புரட்சி: பிரெஞ்சு தேசிய மாநாடு பயங்கர ஆட்சியை நடைமுறைப்படுத்தியது.

1798 – பிரான்சில் இராணுவ சேவை கட்டாயமாக்கப்பட்டது.

1799 – பாஞ்சாலங்குறிச்சியை மேஜர் பானர்மேன் தலைமையிலான படை முற்றுகையிட்டது.

1839 – ஐக்கிய இராச்சியம் சீனாவின் சிங் அரசுக்கு எதிராக அபினிப் போரை ஆரம்பித்தது.

1880 – உருசியாவில் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் உலகின் முதலாவது மின்சார திராம் வண்டி வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.

1882 – முதலாவது அமெரிக்கத் தொழிலாளர் நாள் ஊர்வலம் நியூயார்க்கில் இடம்பெற்றது.

1887 – இங்கிலாந்தில் எக்செட்டர் நகரில் நாடக அரங்கில் தீப்பிடித்ததில் 186 பேர் கொல்லப்பட்டனர்.

1902 – இலங்கையில் சாவகச்சேரிக்கும் பளைக்கும் இடையில் 14 மைல் நீளமான தொடருந்துப் பாதை திறக்கப்பட்டது.[1]

1905 – உருசிய-சப்பானியப் போர்: அமெரிக்க அரசுத்தலைவர் தியொடோர் ரோசவெல்ட்டின் அமைதி உடன்பாடு நியூ ஹாம்ப்சயரில் எட்டப்பட்டு போர் முடிவுக்கு வந்தது.

1914 – முதலாம் உலகப் போர்: பாரிசின் வடகிழக்கே பிரெஞ்சுப் படைகள் செருமனியப் படைகளைத் தாக்கி அவர்களை வென்றனர்.

1932 – பிரெஞ்சு மேல் வோல்ட்டா பிளவடைந்து ஐவரி கோஸ்ட், பிரெஞ்சு சூடான், நைஜர் என மூன்று தனிநாடுகளானது.

1937 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: லேன்சு நகரம் தேசியவாதிகளின் பிடியில் வீழ்ந்தது.

1938 – சிலியில் தோல்வியடைந்த இராணுவப் புரட்சியை அடுத்து சரணடைந்த பாசிச தேசிய சோசலிச இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.

1941 – இரண்டாம் உலகப் போர்: எசுத்தோனியா முழுமையாக நாட்சி ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்டது.

1945 – பனிப்போர்: சோவியத் தூதரக ஊழியர் ஈகர் கௌசென்கோ கனடாவுக்குத் தப்பியோடி, வட அமெரிக்காவில் சோவியத் உளவுகளை வெளிப்படுத்தினார். பனிப்போர் ஆரம்பத்துக்கு இது வழிவகுத்தது.

1957 – கியூபப் புரட்சி: புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசு கியூபாவின் சியென்புவேகோசு நகரில் எழுந்த கிளர்ச்சியை அடக்க அங்கு குண்டுகளை வீசியது.

1969 – மை லாய் படுகொலைகள்: அமெரிக்க இராணுவ அதிகாரி வில்லியம் கலி 109 வியட்நாமியப் பொதுமக்களைப் படுகொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டான்.

1972 – செருமனியில் மியூனிக் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய இசுரேலிய வீரர்களின் மீது பாலத்தீனப் போராளிகள் தாக்குதல் நடத்தியதில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

1975 – சேக்ரமெண்டோ நகரில் அமெரிக்க அரசுத்தலைவர் ஜெரால்ட் ஃபோர்ட் மீது கொலை முயற்சி இடம்பெற்றது.

1977 – அமெரிக்கா வொயேஜர் 1 விண்கலத்தை ஏவியது.

1978 – காம்ப் டேவிட் ஒப்பந்தம்: இசுரேலியப் பிரதமர் பெகினுக்கும் எகிப்திய அரசுத்தலைவர் அன்வர் சாதாத்துக்கும் இடையில் மேரிலாந்தில் அமைதி ஒப்பந்த மாநாடு ஆரம்பமானது.

1980 – உலகின் மிக நீளமான நெடுஞ்சாலைச் சுரங்கமான கோதார்ட் சாலைச் சுரங்கம் (16.224 கிமீ) சுவிட்சர்லாந்தில் திறக்கப்பட்டது.

1984 – டிஸ்கவரி விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு பூமி திரும்பியது.

1984 – மேற்கு ஆஸ்திரேலியா மரணதண்டனையை நிறுத்திய ஆத்திரேலியாவின் கடைசி மாநிலமானது.

1986 – மும்பையில் இருந்து சென்ற அமெரிக்க பான் ஆம் விமானம் 358 பேருடன் கராச்சியில் கடத்தப்பட்டது.

1990 – கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள்: மட்டக்களப்பு வந்தாறுமூலைப் பல்கலைக்கழகத்தில் அகதிகளாகத் தங்கியிருந்த 158 தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1991 – பழங்குடியினரைப் பாதுகாக்கும் பன்னாட்டு உடன்பாடு நடைமுறைக்கு வந்தது.

2005 – சுமாத்ராவில் பயணிகள் விமானம் ஒன்று தரையில் மோதியதில் தரையில் இருந்த 39 பேர் உட்பட மொத்தம் 143 பேர் கொல்லப்பட்டனர்.

2012 – துருக்கியில் இராணுவக் களஞ்சிய சாலையில் இடம்பெற்ற வெடி விபத்தில் 25 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.







பிறப்புகள்

1568 – தொம்மாசோ கம்பனெல்லா, இத்தாலியக் கலைஞர், மெய்யியலாளர், இறையியலாளர் (இ. 1639)

1638 – பிரான்சின் பதினான்காம் லூயி (இ. 1715)

1872 – வ. உ. சிதம்பரம்பிள்ளை, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1936)

1888 – சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், இந்தியாவின் 2வது குடியரசுத் தலைவர் (இ. 1975)

1903 – ஔவை துரைசாமி, தமிழகத் தமிழறிஞர் (இ. 1981)

1909 – பொ. வே. சோமசுந்தரனார், தமிழக உரை, நாடகாசிரியர் (இ. 1972)

1915 – வீ. ப. கா. சுந்தரம், தமிழகத் தமிழறிஞர் (இ. 2003)

1935 – ரூபராணி ஜோசப், இலங்கை மலையக எழுத்தாளர் (இ. 2009)

1945 – மு. மேத்தா, தமிழகக் கவிஞர், பாடலாசிரியர்

1946 – சாங் கியோங்கே, தென் கொரிய வானியலாளர்

1948 – டி. என். சேஷகோபாலன், தமிழக கருநாடக இசைப் பாடகர்

1960 – அப்துல்லா அப்துல்லா, ஆப்கானிய அரசியல்வாதி

இறப்புகள்

1859 – ஆகஸ்ட் கோம்ட், பிரெஞ்சு மெய்யியாலாளர் (பி. 1798)

1906 – லுட்விக் போல்ட்ஸ்மான், ஆத்திரிய இயற்பியலாளர், மெய்யியலாளர் (பி. 1844)

1982 – டக்ளஸ் பேடர், ஆங்கிலேய விமானி (பி. 1910)

1986 – நீரஜா பனோட், இந்திய விமானப் பணிப்பெண் (பி. 1963)

1991 – அலெக்சாண்டர் புஷ்னின், உருசிய, சோவியத் ஓவியர் (பி. 1921)

1995 – சலில் சௌதுரி, இந்திய இசையமைப்பாளர், கவிஞர், எழுத்தாளர் (பி. 1923)

1997 – அன்னை தெரேசா, அல்பேனிய-இந்திய புனிதர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1910)

சிறப்பு நாள்

பன்னாட்டு ஈகை நாள்

ஆசிரியர் நாள் (இந்தியா)




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive