அமெரிக்காவில் அதிக பேரால் பேசக்கூடிய
இந்திய மொழிகளில் தமிழ் 5வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 8ஆண்டுகளில் தமிழ் 55 சதவிகித வளர்ச்சியை அடைந்துள்ளது.கடந்த ஆண்டிற்கான அமெரிக்கன் கம்யூனிட்டி சார்பில் எடுக்கப்பட்ட அறிக்கையை, அமெரிக்க சென்சஸ் ப்யூரோ வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை அமெரிக்க வாழ் மக்கள்குறித்த ஆய்வை வெளிப்படுத்தியுள்ளது. அறிக்கையின் படி அமெரிக்க மக்களால் பேசப்படும் மொழிகளில் தமிழ் 5ம் இடத்தினை பிடித்துள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் மக்களில் 21.8 சதவிகிதத்தினர் ஆங்கிலம் அல்லாத 5 மொழிகளை பேசக்கூடியவர்களாக உள்ளனர். மொத்த மக்கள் தொகையான 30.5 கோடி பேரில் 6.7 கோடி பேர் வெளிநாட்டு மொழிகளை பேசக்கூடியவர்களாக உள்ளனர். பெரும்பாலான மக்கள் இந்தி மொழியையே அதிகளவில் பேசி வருகின்றனர்.
இதற்கு அடுத்தபடியாக குஜராத்தி, தெலுங்கு, பெங்காலி பேசுவோர் உள்ளனர்.அறிக்கையிம்படி இந்தி மொழியை 8.63 லட்சம் பேரும், குஜராத்தியை 4.34 லட்சம் பேரும், தெலுங்கு மொழியை 4.15 லட்சம் பேரும், பெங்காலி மொழியை 2.23 லட்சம் பேரும், தமிழ் மொழியை 1.84 லட்சம் பேரும் பேசுகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாகதமிழ் மொழிக்கு 5வது இடம் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் தமிழ் மொழி பேசுவோரின் எண்ணிக்கை 86.3 சதவிகிதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...