அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான
ஸ்பேஸ்எக்ஸ், முதல்முறையாக வர்த்தக ரீதியாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தில் செல்ல உள்ள நபரின் பெயரை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி ஜப்பான் நாட்டின் தொழிலதிபரும், கோடீஸ்வரருமான யுசாகு மசாவா நிலவுக்குச் செல்ல உள்ளார். கடந்த 1972-ம் ஆண்டுக்குப் பின் நிலவுக்கு எந்த மனிதரும் செல்லவில்லை என்ற நிலையில், ஏறக்குறைய 46ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்குச் செல்லும் மனிதராக யுசாகு மசாவா உள்ளார். இதற்காக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பிரத்தியேகமாக பிக் பால்கான் எனும் ராக்கெட்டை வடிவமைத்து அதில் மனிதர்களை அனுப்ப உள்ளது. இந்த பிக் பால்கான் உலகிலேயே மிகப்பெரிய ராக்கெட்டாகும் புறப்படும் போது செங்குத்தாகவும், திரும்பி வரும் போது விமானம் போல் தரையிறங்கி மீண்டும் பயன்படுத்தும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது. கடந்த 1972-ம் ஆண்டுக்குப் பின் நிலவுக்கு எந்த மனிதர்களையும் எந்த நாடும் அனுப்பவில்லை. இதனால், மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் போட்டியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் விண்வெளிஆய்வு நிறுவனமான ஸ்பேக்ஸ்எக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ எலோன் மஸ்க் 2018-ம் ஆண்டில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பு முடிவு செய்துள்ளோம் என்று கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். அதற்கான திட்டங்களை வகுத்து, தீவிரமாக ஏற்பாடுகளை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் செய்து வந்தது. அதற்கு முன்னோட்டமாகத் தனது சமீபத்தில் செவ்வாய் கிரகத்துக்குத் தனது டெஸ்லா காரை அனுப்பினார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன சிஇஓ எலோன் மஸ்க்இந்நிலையில், சமீபத்தில் ஸ்பேக்ஸ்எக்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், நிலவுக்குச் செல்லும் மனிதரைத் தேர்வு செய்துவிட்டோம் விரைவில் அவரின் பெயர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்து இருந்தது. இதனால், 46 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்குச் செல்லும் அந்த மனிதர் யார் என்பதை அறிந்துகொள்ள உலகம்முழுவதும் பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்தது. இதற்கிடையே ஸ்பேக்ஸ்எக்ஸ் நிறுவனம் இன்று ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பில், நிலவுக்கு தாங்கள் அனுப்ப இருக்கும் மனிதரின் பெயரையும், எந்த நாட்டவர் என்பதையும் அறிவித்துள்ளது. அதன்படி ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பேஷன் டிசைனர், பெரும் கோடீஸ்வரரான யுசாகு மசாவா நிலவுக்குச் செல்ல உள்ளார் என்பதை அறிவித்தது. நிலவுக்கு செல்லும் ஜப்பான் கோடீஸ்வரர் யுசாகு மசாவா
42-வயதாகும் யுசாகு மசாவா ஜப்பானில் ஜோஜோ எனும் ஆன்-லைனில் பேஷன் ஆடைகளை சில்லறை விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும், பல்வேறு கலைப்பொருட்கள், பழங்காலப் பொருட்கள் ஆகியவற்றை சேகரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தையும் யுசாகு நடத்தி வருகிறார். போர்ப்ஸ் பத்திரிகையில் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 18-வது இடத்தில் ஜப்பானின் யுசாகு மசேவா உள்ளார். இவரின் சொத்துமதிப்பு 2,900 கோடி அமெரிக்க டாலராகும்(ஏறக்குறைய ரூ.2.10 லட்சம் கோடி) நிலவுக்குச் செல்ல இருப்பது குறித்து ட்விட்டரில் ஜப்பான் நாட்டின் மசாவா பதிவிட்டுள்ளதில், நான் நிலவுக்குச் செல்லும் போது என்னுடன் சில குறிப்பிட்ட கலைஞர்களைஅழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளேன். அவர்கள் என்ன பார்பார்பார்கள், என்ன உணர்வார்கள், என்ன உருவாக்குவார்கள் என்பதை அறிய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். பூமியில் இருந்து 3.85 லட்சம் கி.மீ தொலைவில் நிலவு இருக்கிறது. 46ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் ஸ்பேக்எக்ஸ் நிறுவனம் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. எப்போது அழைத்துச் செல்ல இருக்கிறது என்பதை இன்னும் கூறவில்லை.
Source: தி ஹிந்து
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...