தமிழகத்தில் நீட் பயிற்சி அளிக்க தொடங்கப்பட்ட 412 மையங்களில் இன்று முதல் பயிற்சி வகுப்புகள் வி-சாட் தொழில்நுட்பத்தில் தொடங்குகிறது. இந்த ஆண்டு தமிழகத்தில் 412 மையங்களில் நீட் பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கடந்த 7ம் தேதி திருநெல்வேலியில் நீட் பயிற்சியை தொடங்கி வைத்தார். இன்று பயிற்சி வகுப்புகள் மேற்கண்ட 412 மையங்களில் தொடங்குகின்றன. வி-சாட் தொழில் நுட்பத்தில் இணைய வழியில் வகுப்புகள் நடக்கும். இதுதொடர்பாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, பயிற்சி வகுப்புகள் காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணி வரை நடத்த வேண்டும். ஒரு வாரத்துக்கு ஒரு மையத்துக்கு 5 பாட ஆசிரியர்கள், ஒரு பொறுப்பாசிரியர் மையத்துக்கு சென்று மாணவர்களுக்கு வழிகாட்டி பயிற்சி அளிக்க வேண்டும். பயி்ற்சி மையங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு வாரமும் நேரில் சென்று பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். தொழில் நுட்ப வசதிகள் சரியாக இருக்கிறதா என்பதையும் பார்வையிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Public Exam 2025
Latest Updates
Home »
» 412 மையங்களில் நீட் பயிற்சி : இன்று தொடக்கம்
Where is the neet coaching centre in madurai?
ReplyDelete