மின்சாரம் இல்லாத உலகத்தைக் கற்பனை செய்யுங்கள் ! எப்படிப் பட்ட இருள்!
இருளை நீக்கும் மின்சாரத்தைக் கண்டுபிடித்தவர்களில் மிக முக்கியமானவர் 14-ம் வயதில் பள்ளிப் படிப்பை நிறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவர் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.
அறிவியல் அடிப்படையில் காலகட்டங்களை வரிசைப் படுத்தினால் எப்படி இருக்கும்? முதலில் வேளாண்மை யுகம், தொழில் துறையுகம், பிறகு மின்னியல் யுகம். அதன் பிறகு மின்னணுவியல் யுகம், அதற்கும் பிறகு இன்றைய அணுயுகம் என வரும்.
இன்றைய நவீன யுகத்தின் அடிப்படையாக இருப்பது மின்னியல் யுகம்தான். இதுதான் உலகை முற்றிலுமாக மாற்றிய காலகட்டம் என்றும் கூறலாம். அத்தகைய அடிப்படையான மாற்றத்துக்குக் காரணமான மின்சாரத்தைக் கண்டுபிடித்தவர்தான் பாரடே.
ஏழ்மையில்...
மைக்கேல் பாரடே பிரிட்டனைச் சேர்ந்தவர். இவர் 1791-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி பிறந்தார். மின் காந்தவியல், மின் வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார்.
தற்போது உலகம் முழுவதும் உள்ள சோதனைச் சாலைகளில் பொருள்களைச் சூடாக்குவதற்காகப் பயன் படுத்தப்பட்டுவரும் பன்சன் சுடர் அடுப்பின் ஆரம்ப வடிவத்தைக் கண்டறிந்தவர் இவர்தான்.
பாரடே தெற்கு லண்டனில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். அப்பா ஜேம்ஸ் பாரடே ஒரு கொல்லர். இளம் வயதிலிருந்தே மைக்கேல் தனது படிப்புக்கு ஆகும் செலவுக்காக வேலை பார்க்க வேண்டி இருந்தது. 14 வயதில் பழைய புத்தகங்கள் வாங்கி, பைண்டிங் செய்து விற்று வந்த ஜார்ஜ் ரீபோவிடம் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார். அங்கே வேலை பார்த்த ஏழு வருடங்களில் ஏறக்குறைய எல்லாப் புத்தகங்களையும் படித்துவிடுவார். இதனால் அறிவியலிலும், குறிப்பாக மின்னியலிலும் அவருக்கு ஆர்வம் வளர்ந்தது.
டேவியின் உதவியாளர்
புகழ்பெற்ற வேதியியல் மற்றும் இயற்பியலாளரான ஹம்ப்ரி டேவியின் விரிவுரை களைக் கேட்கும் வாய்ப்பு இவருக்கு 20 வயதில் கிடைத்தது. அவற்றைக் கேட்டு எழுதிய குறிப்புகளை டேவிக்கு பாரடே அனுப்பிவைத்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...