Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.09.18

திருக்குறள்


வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.

விளக்கம்:

வஞ்ச மனத்தவனின் திருட்டு நடத்தையைக் கண்டு அவன் உடம்போடு கலந்து இருக்கும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களும் தமக்குள் சிரிக்கும்.

பழமொழி

Count not the chicken before they are hatched

 பிள்ளை பெறும் முன்பே பெயரிடாதே! எருமை வாங்கும் முன்பே நெய் விலை பேசாதே

இரண்டொழுக்க பண்பாடு

1. எண்ணெய் பொருட்களை அதிகம் உண்ணாமல் தவிர்த்திடுவேன்.

2. எனக்கு ஏற்படும் சிறு உபாதைகளுக்கு இயற்கை முறையில் தீர்வு காண முயல்வேன்.

 பொன்மொழி

நாம் இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு. இனி எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ, அப்படி நம்மை செய்து கொள்வதற்கான ஆற்றலும் நம்மிடம் உள்ளது.

 - சுவாமி விவேகானந்தர்

பொது அறிவு

1. சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் யார்?

  சர்தார் வல்லபாய் படேல்

2. தமிழில் முதன் முதலில் வெளியிடப்பட்ட தமிழ் நாளிதழ் எது?

 சுதேசமித்திரன்

English words and Meanings

Gentle.           நம்பகமான
Government. அரசு,  சர்கார்
Grid                 கட்டம்
Group.            குழு
Great.             பெரிய

தினம் ஒரு மூலிகையின் மகத்துவம்

*கருவேப்பிலை*

1. இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலம் உள்ளது.  எனவே இரத்தசோகை குணமாகும்.

2. வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளதால் கண்பார்வை குறைபாட்டை சரி செய்யும்.

3. முடி வளர உதவுகிறது.



நீதிக்கதை

வாழ்க்கைப் பயணம் அமெரிக்க தொழிலதிபரான ராக்ஃபெல்லர், முதுமையிலும் கடுமையாக உழைத்தவர். ஒருமுறை, விமானத்தில் பயணித்தார். அப்போதும் ஏதோ வேலையாக இருந்தவரைக் கண்டு அருகில் இருந்த இளைஞர் வியப்புற்றார். அவர், ''ஐயா, இந்த வயதிலும் இப்படிக் கடுமையாக உழைக்கத்தான் வேண்டுமா? ஏகப்பட்ட சொத்து சேர்த்து விட்டீர்கள்... நிம்மதியாக சாப்பிட்டு, ஓய்வெடுக்கலாமே?!'' என்று ராக்ஃபெல்லரிடம் கேட்டார்.

உடனே ராக்ஃபெல்லர், ''விமானி இந்த விமானத்தை இப்போது நல்ல உயரத்தில் பறக்க வைத்து விட்டார். விமானமும் சுலபமாகப் பறக்கிறது. அதற்காக... இப்போது எஞ்ஜினை அணைத்துவிட முடியுமா? எஞ்ஜினை அணைத்துவிட்டால் என்னவாகும் தெரியுமா?'' என்று கேட்டார்.

''பெரும் விபத்து நேருமே!''- பதற்றத்துடன் பதிலளித்தான் இளைஞன்.

இதைக் கேட்டுப் புன்னகைத்த ராக்ஃபெல்லர், ''வாழ்க்கைப் பயணமும் இப்படித்தான். கடுமையாக உழைத்து உயரத்துக்கு வர வேண்டியுள்ளது. வந்த பிறகு, 'உயரத்தைத் தொட்டு விட்டோமே...' என்று உழைப்பதை நிறுத்தி விட்டால், தொழிலில் விபத்து ஏற்பட்டு விடும். உழைப்பு என்பது வருமானத்துக்காக மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதிக்காகவும்தான்!'' என்று விளக்கம் அளித்தார்.

இன்றைய செய்திகள்

19.09.18

* மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறறந்த தினத்தை (அக். 2) நினைவுகூறும் வகையில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை இலச்சினை வெளியிட்டாா்.

* தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது.

* கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக அம்மாநிலம் முழுவதும் மின் கழிவு மலைபோல் குவிந்து பெரும் இன்னலை ஏற்படுத்தியுள்ளது.

* உலக மல்யுத்த சாம்பியன் போட்டிக்கு இந்தியாவின் சாக்ஷி மாலிக் தகுதி பெற்றுள்ளார்.

* ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியன்ங இந்தியா ஹாங்காங்கிற்கு எதிரான  முதல் ஆட்டத்தில் இந்தியா 285 ரன் குவித்துள்ளது.

Today's Headlines

* President Rajnath Govind has issued a logo on Tuesday to commemorate Mahatma Gandhi's 150th birthday (Oct. 2).

*The Metreological department has said Tuesday that it is likely to have moderate rains in the next 24 hours.

* The recent floods in Kerala have caused a huge amount of e-waste due to floods across the whole land and causing huge hardship.

* India's Saxi Malik has qualified for World Wrestling Championship.

* India has scored 285 runs in the first match against Hong Kong in the Asia Cup cricket tournament.

Prepared by
Covai women ICT_போதிமரம்




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive